அதிகரிக்கும் டெங்கு, எலி காய்ச்சல் - 2 நாளில் 20 ஆயிரம் பேருக்கு சிகிச்சை

x

கேரளாவில் காய்ச்சலால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், காய்ச்சலால் பாதிக்கப்பட்டால் மருத்துவர்களை நாடுமாறு அம்மாநில அரசு அறிவுறுத்தியுள்ளது.

கேரளா மாநிலத்தில் கடந்த சில வாரங்களாக காய்ச்சல் பாதிப்பு அதிகரித்து வருகிறது. கடந்த 13 நாட்களுக்குள் சுமார் ஒரு லட்சத்து 10 ஆயிரம் பேர், சாதாரண காய்ச்சலுக்காக மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுள்ளனர். கடந்த இரண்டு நாட்களில் மட்டும் 20 ஆயிரம் பேர், அரசு மருத்துவமனைகளில் காய்ச்சலுக்காக சிகிச்சை பெற்றுள்ளனர். இதனிடையே அம்மாநிலத்தில் டெங்கு மற்றும் எலிக்காய்ச்சல் பாதிப்பும் அதிகரித்து வருகிறது. இதனையடுத்து கேரள சுகாதாரத்துறை, காய்ச்சல் ஏற்பட்டால் சுயமாக மருந்துகளை எடுத்துக்கொள்ள வேண்டாமென்றும், உடனடியாக மருத்துவர்களின் ஆலோசனையை பெறுமாறும் பொதுமக்களை அறிவுறுத்தியுள்ளது. மேலும் கொசு ஒழிப்பு பணிகளை தீவிரப்படுத்த அறிவுறுத்தியுள்ள சுகாதாரத்துறை, எலி காய்ச்சல் ஏற்படுவதை தடுக்க பாதுகாப்பு நெறிமுறைகளை வெளிகிட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்