"தலையாய பிரச்சினைகள் குறித்து பேச மறுப்பது ஏன்?" - பிரதமர் மோடிக்கு பிரியங்கா காந்தி கேள்வி
பிரதமர் மோடி நாட்டின் தலையாய பிரச்சினைகள் குறித்து பேச மறுப்பது ஏன்? என காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி கேள்வி எழுப்பியுள்ளார். கர்நாடகாவில் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ள அவர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, மூன்றரை ஆண்டுகளில் எத்தனை வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டது என்பதை பிரதமரிடம் கேட்க விரும்புவதாக தெரிவித்த அவர், பணவீக்கம், ஊழல், வேலையில்லா திண்டாட்டம் உள்ளிட்ட பிரச்சினைகள் குறித்து பேச மறுப்பது ஏன்? என்றார். முன்னதாக ஹோஸ்கோட்டில் ஊர்வலமாக சென்ற அவருக்கு, தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
Next Story