இரக்கம் காட்டாத தேர்தல் அதிகாரி.. கைக்குழந்தையொடு தவித்த தாய்.. சர்ச்சையை கிளப்பிய கர்நாடகா தேர்தல் பணி

x

கர்நாடகாவில் நாளை சட்டப் பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், பெண் அலுவலர் ஒருவர் தனது ஒரு வயது கைக்குழந்தையுடன் தேர்தல் பணிக்கு வந்துள்ளார்.

கர்நாடக சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு நாளை காலை 7 மணிக்கு தொடங்கவுள்ள நிலையில், தேர்தல் பணியில் ஈடுபடும் அலுவலர்களுக்கு இன்று இறுதிக் கட்ட பயிற்சி அளிக்கப்பட்டு, சீல் வைக்கப்பட்ட வாக்கு இயந்திரங்களுடன் வாக்குச்சாவடிகளுக்கு அனுப்பப்பட்டு வருகின்றனர். இந்தநிலையில், வித்யாரண்யபுராவைச் சேர்ந்த பெண் அலுவலர் ஒருவர், காந்திநகர் சட்டமன்ற தொகுதியின் தேர்தல் அலுவலராக நியமிக்கபட்டார். அவர் தனக்கு ஒரு வயதில் கைக்குழந்தை இருப்பதால், தேர்தல் பணியில் இருந்து விலக்கு அளிக்குமாறு மேலதிகாரியிடம் கேட்டுள்ளார். ஆனால், மேலதிகாரி ஒப்புக்காள்ளாததால் கைக்குழந்தையுடன் தேர்தல் பணிக்கு வந்தார். கர்ப்பிணிகள், கைக்குழந்தைகள் வைத்திருப்பவர்கள், உடல்நல பிரச்னை இருப்பவர்களுக்கு தேர்தல் பணியில் இருந்து விலக்கு அளிக்க வாய்ப்பு இருக்கும் சூழலில், மேலதிகாரியின் கட்டாயத்தால் பெண் அலுவலர் கைக்குழந்தையுடன் தேர்தல் பணிக்கு வந்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்