தமிழக பாஜக மேலிட பொறுப்பாளர் சி.டி.ரவிக்கு கர்நாடக தேர்தலில் படுதோல்வி

x

கனகபுரா தொகுதியில் கர்நாடக காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவகுமாரை எதிர்த்துப் போட்டியிட்ட அமைச்சர் அசோகா தோல்வியைத் தழுவினார்.

வருணா தொகுதியில் அமைச்சர் சோமண்ணா, சித்தராமையாவிடமும், சாமராஜநகரில் புட்டரங்க ஷெட்டியிடமும் தோல்வியடைந்தார்.

சின்னநாயக்கன ஹல்லி தொகுதியில் அமைச்சர் மாதுசுவாமியும், பெல்லாரி கிராமப்புறத்தில் அமைச்சர் ஸ்ரீராமலு, நாகேந்திராவிடமும் தோல்வியைத் தழுவினார்.

அதேபோல், சிக்கபல்லாபுராவில் அமைச்சர் சுதாகரும், ஹோசகோட்டையில் பாஜக எம்.டி. பி நாகராஜும், ஹிரேகெரூருவில் பி.சி.பாட்டீலும் தோல்வி அடைந்தனர்.

திப்டூர் தொகுதியில் நாகேஷும், பிலகி தொகுதியில் முருகேஷ் நிராணியும், மற்றும் சிக்கமகளூருவில் பாஜக தேசிய பொதுச்செயலாளர் சி.டி.ரவியும் தோல்வி கண்டுள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்