கர்நாடகாவில் திடீர் ட்விஸ்ட்.. புதிய தேர்தல் கருத்துக்கணிப்பு முடிவால் பரபரப்பு

x

கர்நாடகாவில் தொங்கு சட்டசபையே அமையும் என, ஜான் கி பாத் மற்றும் ஏசியாநெட் நிறுவனங்கள் நடத்திய கருத்துக்கணிப்பில் தெரிய வந்துள்ளது.

கர்நாடகாவில் வரும் மே மாதம் 10ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், ஜான் கி பாத் மற்றும் ஏசியாநெட் நிறுவனங்கள் இணைந்து தேர்தலுக்கு முந்தைய கருத்துக்கணிப்பை நடத்தின. அதில் எந்த கட்சியும் பெரும்பான்மை பெறாமல், தொங்கு சட்டசபையே அமையும் என தெரிய வந்துள்ளது. தனிப்பெரும்பானமைக்கு 113 இடங்கள் தேவைப்படும் நிலையில், பாஜக 98 முதல் 109 இடங்களைப் பெற்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. காங்கிரசுக்கு 89 முதல் 97 இடங்களும், மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சிக்கு 25 முதல் 29 இடங்களும் கிடைக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்