"ஆசிர்வதிக்க மோடி என்ன கடவுளா?".. போட்டு தாக்கிய சித்தராமையா

x

கர்நாடகா மோடியின் ஆசிர்வாதம் இல்லாமல் இருக்க கூடாது என ஜே.பி நட்டா கூறியதற்கு, கர்நாடக முன்னாள் முதல்வர் சித்தராமையா கண்டனம் தெரிவித்துள்ளார். கர்நாடகாவில் தேர்தல் பொதுக்கூட்டத்தில் பேசிய பாஜக தேசிய தலைவர் ஜே.பி நட்டா, சட்டமன்ற தேர்தலில் பாஜகவை வெற்றி பெற வைக்குமாறு கேட்டுக்கொண்டதோடு, மோடியின் ஆசிர்வாதம் இல்லாமால் கர்நாடகா இருக்க கூடாது என தெரிவித்தார். இதற்கு கண்டனம் தெரிவித்துள்ள கர்நாடகாவின் முன்னாள் முதல்வர் சித்தராமையா, யாரையும் ஆசிர்வதிப்பதற்கு நரேந்திர மோடி கடவுள் இல்லை என கூறியுள்ளார். ஜேபி நட்டாவிற்கு, ஜனநாயகம் குறித்து பாடம் கற்கவேண்டிய தேவை உள்ளதாக தெரிகிறது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்