கிண்டல் செய்த பிரதமர் மோடி... வீடியோ வெளியிட்டு சவால் விட்ட சித்தராமையா

x

கர்நாடக தேர்தலில் போட்டியிடும் 75 வயதாகும் காங்கிரஸ் மூத்த தலைவர் சித்தராமையா, இதுதான் தனது கடைசி தேர்தல் எனக் கூறிவருகிறார். இதனை கேலி செய்த பிரதமர் மோடி, சித்தராமையா அரசியலில் இருந்து ஓய்வு பெறுவதாக கூறி வாக்கு கேட்கிறார், மக்கள் சோர்ந்துபோன மற்றும் தோற்கடிக்கப்பட்ட காங்கிரசை தேர்வு செய்ய மாட்டார்கள். உற்சாகத்துடன் இருக்கக் கூடிய பாஜகவை தேர்வு செய்வார்கள் என்றார். இதற்கு ட்விட்டரில் பதில் அளித்திருக்கும் சித்தராமையா, எடியூரப்பா சோர்ந்துவிட்டார் என்றுதான் முதல்வர் பதவியிலிருந்து நீக்கினீர்களா? பிறகு எதற்கு அவரை மீண்டும் பிரசாரத்திற்கு அழைத்தீர்கள்...? கேள்விகளை எழுப்பியிருக்கிறார். வாருங்கள் ஓடிபார்ப்போம்... யார் சோர்வடைகிறார் என்பதை பார்ப்பும் என மோடிக்கு சவால் விட்டிருக்கும் சித்தராமையா, கடைசி மூச்சு இருக்கும் வரையில் மக்களுக்காக சேவையாற்றுவேன் என கூறி ராகுலுடன் பாரத் ஜோடோ யாத்திரையில் ஓடிய வீடியோவை பதிவிட்டுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்