பெரும்பான்மை வெற்றியா?..தொங்கு சட்டமன்றமா?.. ஆபரேஷன் கமலாவுக்கு தயாராகும் பாஜக... MLA-க்களை பாதுகாக்க காங்கிரஸ் புதிய திட்டம்
இந்த தேர்தலில் தங்கள் கட்சிக்கு பெரும்பான்மை கிடைக்காத நிலையில் சுயேட்சை எம்எல்ஏக்களுடன் சேர்த்து மதசார்பற்ற ஜனதா கால கூட்டணியில் மீண்டும் ஆட்சி அமைக்க காங்கிரஸ் மேலிடம் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும் வெற்றி பெற்ற அனைத்து எம்எல்ஏக்களும் பெங்களூருக்கு புறநகர் பகுதியில் உள்ள தனியார் சொகுசு விடுதியில் தங்க வைக்கப்படுவார்கள் என்றும், கடந்த முறையை போல் இல்லாமல் இந்த முறை ஆட்சி அமைக்கும் வரை மூத்த தலைவர்களான சித்தராமையா, காங்கிரஸ் பொதுச் செயலாளர் ரஞ்சித் சிங் வாலா, கர்நாடக காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவகுமார் ஆகியோர் எம்எல்ஏக்கள் உடன் இருப்பார்கள் என கூறப்படுகிறது. ஒரே சொகுசு விடுதியில் இருந்தால் எம்எல்ஏக்கள் அனைவரையும் கண்காணிக்க முடியுமா என்ற சந்தேகமும் எழுந்துள்ளது. காங்கிரஸ் எம்எல்ஏக்களை இரண்டு இடங்களில் தங்க வைக்க காங்கிரஸ் திட்டமிட்டுள்ளது. மேலும் வெற்றி பெற்ற எம்எல்ஏக்களிடம் முதலிலேயே உத்திரவாத பத்திரத்தில் கையெழுத்து வாங்கவும் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.