பரபரப்பாக நடந்து முடிந்த கர்நாடக தேர்தல் - எவ்வளவு வாக்குப்பதிவு..?

x

கர்நாடகாவில் 224 தொகுதிகளுக்கு ஒரே கட்டமாக நேற்று வாக்குப்பதிவு நடைபெற்றது. 58 ஆயிரத்து 545 வாக்குச்சாவடிகளில், 5 கோடியே 30 லட்சம் வாக்காளர்கள் வாக்களிக்க ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. மொத்த வாக்காளர்களில் 72.67 சதவீத வாக்காளர்கள் நேரடியாக வாக்குச்சாவடிக்கு வந்து தங்கள் வாக்குகளை பதிவு செய்தனர். இது தவிர 80 வயதுக்கு மேற்பட்டவர்கள் வீட்டில் இருந்தபடியே வாக்களிக்கலாம் என்ற வசதியை இந்திய தேர்தல் ஆணையம் அறிமுகப்படுத்தி இருந்தது. இது தவிர தபால் வாக்குகள் தனியாக பதிவு செய்யப்பட்டிருந்தது. ஒரு சில இடங்களைத் தவிர மற்ற அனைத்து இடங்களிலும் அமைதியான முறையில் வாக்குப்பதிவு நடைபெற்றது. சில வாக்குச் சாவடிகளில் இயந்திரங்களில் ஏற்பட்ட திடீர் கோளாறுகள் உடனடியாக சரி செய்யப்பட்டு வாக்கு பதிவுகள் தொடரப்பட்டுள்ளதாகவும் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. தேர்தலின்போது இடையூறு ஏற்படுத்தியதாக 12 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.


Next Story

மேலும் செய்திகள்