இன்று சூடுபிடிக்க போகும் கர்நாடக சட்டப்பேரவை தேர்தல்..

x

224 தொகுதிகளை கொண்ட கர்நாடக சட்டப்பேரவைக்கு ஒரே கட்டமாக அடுத்த மாதம் 10-ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இதனையடுத்து, தேர்தல் பணிகளில் அரசியல் கட்சியினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். ஆளும் பாரதிய ஜனதா கட்சி 189 தொகுதிகளுக்கும், காங்கிரஸ் கட்சி 166 தொகுதிகளுக்கும், மதச்சார்பற்ற ஜனதா தளம் 93 தொகுதிகளுக்கும் வேட்பாளர்களை அறிவித்துள்ளன. இந்நிலையில், சட்டப்பேரவை தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் இன்று தொடங்குகிறது. வேட்பு மனு தாக்கல் செய்ய வரும் 20-ந்தேதி கடைசி நாள் ஆகும். 21-ம் தேதி மனுக்கள் மீதான பரிசீலனை நடைபெறுகிறது. 24-ம்தேதி மனுக்களை வாபஸ் பெற கடைசி நாளாகும்.


Next Story

மேலும் செய்திகள்