"பாஜகவுக்கு 30 வருஷமா விசுவாசமா இருந்ததுக்கு இதான் மரியாதையா?" - கொதித்து பேசிய கர்நாடக மாஜி முதல்வர்

x

கர்நாடகா தேர்தலில் போட்டியிட வாய்ப்பு மறுக்கப்பட்ட நிலையில், தனது 30 ஆண்டுகால அரசியலுக்கு மரியாதை இல்லை என பாஜக முன்னாள் முதல்வர் ஜெகதீஷ் ஷட்டர் தெரிவித்துள்ளார்.

பெங்களூருவில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "பாஜகவுக்கு விசுவாசமாக இருந்து, கட்சிக்காக உழைத்து வருவதாக தெரிவித்தார். இப்போது என்னுடைய விசுவாசம் மறுக்கப்படுவதாக உணர்வதாக கூறிய அவர், கட்சியில் விசுவாசமாக இருப்பவர்களுக்கு மரியாதை இல்லை என்று வேதனை தெரிவித்தார்.30 வருடங்களாக கட்சிக்காக உழைத்ததால், சட்டப்பேரவை தேர்தலில் தான் போட்டியிட விரும்புவதாகவும், கட்சியினர் தங்கள் முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்