"பிடிக்காமல் ஓய போவதில்லை" - பம்பரமாய் சுழல போகும் பிரதமர்

கர்நாடகாவில் பிரதமர் மோடி, 6 நாட்களில் 15 தேர்தல் பொதுக்கூட்டங்கள் மற்றும் பேரணிகளை நடத்தவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கர்நாடகா மாநிலத்தில் மே 10 ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது. இதனையொட்டி நாளையும், நாளை மறுநாளும் பிரதமர் மோடி, கர்நாடகாவில் பிரசாரம் செய்யவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதேபோல் அடுத்த மாதம் 3,4,6 மற்றும் 7 ஆம் தேதிகளிலும் பிரதமர் மோடி, அம்மாநிலத்தில் பிரசாரம் செய்யவுள்ளதாகவும், இந்த 6 நாட்களில் அவர் 12 முதல் 15 தேர்தல் பொதுக்கூட்டங்கள் மற்றும் பேரணிகளை நடத்தவுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. அடுத்தாண்டு நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலுக்கு, கர்நாடக சட்டமன்ற தேர்தல் அரையிறுதி போட்டியாக கருதப்படுவதால், பிரதமர் மோடி கர்நாடகா தேர்தல் பிரசாரத்திற்கு அதிக முக்கியத்துவம் அளிப்பதாக கூறப்படுகிறது.

X

Thanthi TV
www.thanthitv.com