கள்ள ஓட்டு-க்கு புல் ஸ்டாப்.. கர்நாடக தேர்தலில் புதிய அல்டிமேட் டெக்னாலஜி..!

x

கர்நாடக சட்டமன்ற தேர்தலில் முதன்முறை சோதனை முயற்சியாக செயற்கை நுண்ணறிவு அடிப்படையில் முக அடையாளம் காணும் நவீன தொழில்நுட்பத்தை தேர்தல் ஆணையம் பயன்படுத்துகிறது.

கர்நாடக சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நாளை காலை தொடங்க உள்ள நிலையில் தேர்தல் ஆணையம் இதற்கு முழு வீச்சில் தயாராகி விட்டது. இந்த தேர்தலில் இரண்டு முக்கிய அம்சங்களை செயல்பாட்டிற்கு கொண்டு வர முடிவு தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளது. 80 வயதிற்கு மேற்பட்டவர்கள் வீட்டிலிருந்தபடியே வாக்களிக்கும் வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது. வீட்டிலிருந்து வாக்களிக்க விரும்புபவர்கள் முன்கூட்டியே தகவல் தெரிவிப்பதன் அடிப்படையில் தேர்தல் ஆணையம் அவர்களது இடத்திற்கு சென்று அவர்களின் வாக்குகளை பதிவு செய்யும்.மேலும், செயற்கை நுண்ணறிவு அடிப்படையில் அடையாள அட்டைக்கு பதிலாக Face recognition technology மூலம் வாக்காளர்களை அடையாளம் கண்டு வாக்களிக்கும் முறையை சோதனை அடிப்படையில் ஒரு சில வாக்குச்சாவடி மையங்களில் அறிமுகப்படுத்தியுள்ளது. இது வாக்காளர்களின் வாக்களிக்கும் நேரத்தை குறைப்பதுடன், கள்ள ஓட்டுக்கள் பதிவாவதையும் தடுக்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தெலுங்கானாவில் இந்த முறை அறிமுகப்படுத்தப்பட்ட நிலையில், தற்போது கர்நாடக சட்டப்பேரவை தேர்தலில் சோதனை அடிப்படையில் இந்திய தேர்தல் ஆணையம் அறிமுகப்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.
Next Story

மேலும் செய்திகள்