முதல்வர் மகுடம் யாருக்கு..? - இன்று கர்நாடக தேர்தல் வாக்கு எண்ணிக்கை - மக்களின் ஆதரவை பெறப்போவது யார்..?

x

224 தொகுதிகளை கொண்ட கர்நாடக சட்டசபைக்கு கடந்த 10ஆம் தேதி தேர்தல் நடைபெற்ற நிலையில் 73.19 சதவீத ஓட்டுக்கள் பதிவாகின. தேர்தலுக்கு பயன்படுத்தப்பட்ட மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் அனைத்தும் சீல் வைக்கப்பட்டு, அந்தந்த மாவட்டங்களில் உள்ள வாக்கு எண்ணும் மையங்களில் வைக்கப்பட்டுள்ளது. தேர்தலில் இரண்டாயிரத்து 615 வேட்பாளர்கள் போட்டியிட்ட நிலையில், இன்று வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது. கர்நாடகா முழுவதும் 36 மையங்களில் ஓட்டுகள் எண்ணப்படும் நிலையில், உச்சகட்ட பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. வாக்கு எண்ணிக்கையை முன்னிட்டு பெங்களூரு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக காலை 6 மணி முதல் நள்ளிரவு 12 மணி வரை 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. காலை 8 மணிக்கு ஓட்டு எண்ணிக்கை தொடங்கும் நிலையில், பிற்பகல் 2 மணிக்குள் பெரும்பாலான தொகுதிகளின் முடிவுகள் தெரிந்து விடும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Next Story

மேலும் செய்திகள்