பிரசாரத்தில் உச்சகட்ட விபரீதம்.. காங். தலைவர் தலையில் பீறிட்ட ரத்தம்.. சொட்ட சொட்ட தூக்கி கொண்டாடிய தொண்டர்கள் - பரபரப்பு காட்சி

x

கர்நாடக மாநிலம் தும்கூரு மாவட்டத்தில், தேர்தல் பிரச்சாரத்தின் போது காங்கிரஸ் மூத்த தலைவர் பரமேஸ்வர் தலையில் கல் விழுந்து படுகாயம் ஏற்பட்டது.

கர்நாடக மாநிலம் தும்கூரு மாவட்டம் கொரட்டகரே தொகுதியில் இருந்து காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் பரமேஸ்வர் போட்டியிடுகிறார். பைரேன ஹள்ளி என்ற கிராமத்தில் அவர் பிரசாரம் செய்து கொண்டிருந்த போது அவரை வரவேற்க ஜேசிபி வாகனத்தில் இருந்து மலர்கள் கொட்டப்பட்டது. அப்போது, திடீரென பரமேஸ்வரர் தலையில் ஒரு கல் விழுந்து பலத்த காயம் ஏற்பட்டது. கல் தலையில் விழுந்து ரத்தம் கசிந்து கொண்டிருந்த நிலையில் உடனடியாக காங்கிரஸ் தொண்டர்கள் அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று சிகிச்சை அளித்தனர். இந்நிலையில் மர்ம நபர்கள் பரமேஸ்வரை தாக்க திட்டமிட்டு கல் எறிந்தார்களா அல்லது ஜேசிபி வாகனத்தில் இருந்து கொட்டப்பட்டு பூவிலிருந்து கல் விழுந்ததா என்பது குறித்து காவல்துறை விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்