"காங்கிரஸ் தலைவர் கார்கேவை குடும்பத்தோடு கொல்ல பாஜக சதி" - பாஜக வேட்பாளர் பேசிய பகீர் ஆடியோ

x

தேசிய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே மற்றும் அவரது குடும்பத்தினரை கொலை செய்ய பாஜக சதித்திட்டம் தீட்டியுள்ளதாக காங்கிரஸ் குற்றம் சாட்டியுள்ளது.

கர்நாடகாவின் சித்தாபூர் பாஜக வேட்பாளர் மணிகண்ட ரத்தோட் மற்றும் உள்ளூர் பாஜக தலைவர் ஒருவருக்கும் இடையே நடந்த உரையாடலின் ஆடியோ கிளிப்பை கர்நாடகாவின் காங்கிரஸ் பொதுச் செயலாளரான ரன்தீப் சிங் சுர்ஜேவாலா வெளியிட்டார். அதில், சித்தாப்பூரில் மல்லிகார்ஜுன கார்கேவின் மகன் பிரியங்க் கார்கேவை எதிர்த்துப் போட்டியிடும் மணிகண்ட ரத்தோட், மல்லிகார்ஜுன கார்கேவின் குடும்பத்தை அவதூறாக பேசி, கொலை செய்து விடுவதாய் மிரட்டும் பேச்சுகள் இடம்பெற்றுள்ளன. இதை சாதாரணமாக எடுத்துக் கொல்ல முடியாது என்றும், பிரதமர் மோடி, கர்நாடக காவல்துறை, தேர்தல் ஆணையம் அமைதியாக இருந்தாலும், கர்நாடக மக்கள் தக்க பதிலடி கொடுப்பார்கள் என்று ரன்தீப் சிங் சுர்ஜேவாலா தெரிவித்தார்.


Next Story

மேலும் செய்திகள்