காங்கிரஸ், பாஜக தொண்டர்களிடையே வெடித்த மோதல்- கர்நாடகாவில் 144 தடை உத்தரவு பிறப்பிப்பு
கர்நாடகாவில் சட்டப் பேரவைத் தேர்தல் முடிந்த பிறகு, மங்களூர் நகரில் காங்கிரஸ் மற்றும் பாஜக தொண்டர்களுக்கு இடையே மோதல் ஏற்பட்டது.
மங்களூர் புறநகரில் உள்ள மூட்ஷெட் பகுதியில் நேற்று மாலை வாக்குப்பதிவு நிறைவடைந்த பிறகு காங்கிரஸ் தொண்டர்களுக்கும், பாஜக தொண்டர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. வாக்குச்சாவடியில் ஏற்பட்ட சிறு வாக்குவாதம் காரணமாக, வாக்குப் பதிவிற்கு பிறகு இரு தரப்பினரும் ஒருவரை ஒருவர் தாக்கத் தொடங்கியதால் பரபரப்பு ஏற்பட்டது. சம்பவ இடத்திலிருந்து போலீசார் லேசான தடியடி நடத்தி கூட்டத்தை கலைத்தனர். இந்த மோதலின்போது, மூடுபிதிரி காங்கிரஸ் வேட்பாளர் மிதுன் ராயின் கார் அடித்து நொறுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. அங்கு பதற்றமான சூழல் நிலவியதால் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
Next Story