"லிங்காயத் சமூகத்தையே ஊழல் சமூகமாக விமர்சிக்கிறார்" - சித்தராமையா மீது முதல்வர் பசவராஜ் பொம்மை குற்றச்சாட்டு
லிங்காயத் சமூகத்தையே ஊழல் சமூகமாக சித்தராமையா விமர்சிப்பதாக கர்நாடக முதலமைச்சர் பசவராஜ் பொம்மை விமர்சித்துள்ளார்.
கர்நாடக சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில், 40 சதவீதம் கமிஷன் அரசு என பாஜக ஊழல் குற்றச்சாட்டை சுமத்தி காங்கிரஸ் பிரச்சாரம் செய்து வருகிறது. முதல்வர் பசவராஜ் பொம்மை மீது ஊழல் குற்றச்சாட்டு வைத்து முன்னாள் முதல்வர் சித்ராமையா கடுமையாக விமர்சித்து வருகிறார். இந்நிலையில் தன்னை மட்டும் விமர்சிக்காமல், தனது லிங்காயத் சமூகத்தையே ஊழல் சமூகமாக சித்தராமையா விமர்சிப்பதாக முதல்வர் பசவராஜ் பொம்மை குற்றம் சாட்டியுள்ளார். இதற்கு பதில் அளித்துள்ள சித்திராமையா, தான் முதலமைச்சரின் ஊழல் குறித்து மட்டுமே விமர்சனம் செய்து வருவதாகவும், ஆனால் லிங்காயத் வகுப்பை குறித்து எங்கும் தான் தவறாக பேசவில்லை என்றும் தெளிவுபடுத்தியுள்ளார். தேர்தல் சமயத்தில் அரசியல் ஆதாயம் பெற, பாஜக இவ்வாறான தவறான குற்றச்சாட்டுகளை முன்னெடுத்து வருவதாகவும் கூறியுள்ளார்.