கர்நாடகாவில் பாஜகவுக்கு காங்கிரஸ் வைத்த செக்
கர்நாடக மாநிலத்தில் அனைத்து ஜாதியினருக்கும் தற்போதைய 50 சதவீத இட ஒதுக்கீடு 75 சதவீதமாக உயர்த்தப்படும் என்று காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் முதல்வருமான சித்தராமையா கூறியுள்ளார். கர்நாடகத்தில் அடுத்த மாதம் 10-ஆம் தேதி சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் அனைத்து தரப்பு மக்களின் வாக்குகளையும் கவர்வதற்கு காங்கிரஸ் திட்டமிட்டுள்ளது. அதன் ஒரு பகுதியாக, இடஒதுக்கீடு வரம்பை 50 சதவீதத்தில் இருந்து 75 சதவீதமாக உயர்த்தவும், மக்கள்தொகை அடிப்படையில் அனைத்து சாதியினருக்கும் இடஒதுக்கீட்டை அதிகரிக்கவும் காங்கிரஸ் கட்சி உறுதியாக உள்ளது என்று காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் முதல்வருமான சித்தராமையா தனது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.
Next Story