கர்நாடகாவில் பாஜகவுக்கு அடி மேல் அடி.. முக்கிய அமைச்சர் தலையில் பேரிடி

x

கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை ஷிகோன் தொகுதியில் வெற்றி பெற்ற நிலையில், மாநில காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவகுமார் கனகபுராவில் வெற்றி பெற்றார்.

கனிம வள தொழிலதிபர் ஜனார்த்தன ரெட்டி கே.ஆர்.பி.பி கட்சி சார்பில் கங்காவதி தொகுதியில் போட்டியிட்டு வென்ற நிலையில், அவரது மனைவி லட்சுமி அருணா பெல்லாரி நகரத்தில் தோல்வியைத் தழுவினார்.

ஜனார்த்தன ரெட்டியின் தம்பி சோமசேகர ரெட்டியும் பெல்லாரி நகரில் பாஜக சார்பில் போட்டியிட்டு தோல்வியைத் தழுவினார்.

காங்கிரசைச் சேர்ந்த முன்னாள் முதல்வர் ஜெகதீஷ் ஷெட்டர் மத்திய ஹூப்ளி தார்வாட் தொகுதியில் தோல்வியைத் தழுவிய நிலையில், முன்னாள் துணை முதல்வர் லக்‌ஷ்மன் சவதி அத்தானி தொகுதியில் வெற்றி பெற்றார்.

வருணா தொகுதியில் போட்டியிட்ட காங்கிரஸ் மூத்த தலைவர் சித்தராமையா வெற்றி பெற்ற நிலையில், காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவின் மகன் பிரியங்க் கார்கே சித்தாப்பூரிலும், எடியூரப்பாவின் மகன் விஜயேந்திரா ஷிகாரிபுராவிலும் வெற்றி பெற்றனர்.

முன்னாள் முதல்வர் குமாரசாமி சென்னாபட்னாவில் வெற்றி பெற்ற நிலையில், அவரது மகன் நிகில் குமாரசாமி ராமநகராவில் தோல்வியடைந்தார்.

அமைச்சர் அசோகா கனகபுரா, பத்மநாபநகர் ஆகிய 2 தொகுதிகளில் போட்டியிட்டு இரண்டிலுமே தோல்வியைத் தழுவினார்.

தமிழர்கள் அதிகம் உள்ள சி.வி.ராமன் நகரில் பாஜகவைச் சேர்ந்த ரகு வென்ற நிலையில், எதிர்த்துப் போட்டியிட்ட காங்கிரசைச் சேர்ந்த ஆனந்த் குமார் தோல்வியடைந்தார்.

காங்கிரசைச் சேர்ந்த தினேஷ் குண்டுராவ் காந்தி நகரில் வென்ற நிலையில், காங்கிரசைச் சேர்ந்த முன்னாள் துணை முதலமைச்சர் பரமேசுவரா கொரட்டகீரில் வெற்றி பெற்றார்.

புலிகேசி நகரில் ஸ்ரீனிவாசா வென்றதன் மூலம் அத்தொகுதி காங்கிரஸ் வசமானது.


Next Story

மேலும் செய்திகள்