அண்ணாமலை பிரசாரம் செய்த 3 அமைச்சர் தொகுதிகளில் பாஜக படுதோல்வி

x

கர்நாடக சட்டப்பேரவை தேர்தலில் காங்கிரஸ் கட்சி பெரும்பான்மையான தொகுதிகளை வென்றுள்ளது. அண்ணாமலை பொறுப்பில் எடுத்து கொண்ட 86 தொகுதிகளில் 50 சதவீதம் தோல்வி கண்டுள்ளன.

கர்நாடகா சட்டப்பேரவை தேர்தலில், 86 தொகுதிகளுக்கு பொறுப்பு அதிகாரியாக பாஜக சார்பில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலைக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது. இதனை ஒட்டி கர்நாடகா சென்ற அண்ணாமலை, அங்கேயே முகாமிட்டு, தீவிர தேர்தல் பிரசாரம் மேற்கொண்டார். இந்நிலையில், சட்டப்பேரவை தேர்தலில் காங்கிரஸ் கட்சி பெரும்பான்மையான தொகுதிகளை வென்றுள்ளது. அண்ணாமலை பொறுப்பில் எடுத்து கொண்ட 86 தொகுதிகளில் 50 சதவீதம் தோல்வி கண்டுள்ளன. அண்ணாமலை பிரசாரம் செய்த 3 அமைச்சர்கள் தொகுதியில் பாஜக தோல்வி கண்டுள்ளது. கர்நாடகாவில் அண்ணாமலை முகாமிட்டு தீவிர தேர்தல் பிரசாரம் செய்து வந்தது குறித்து பல்வேறு தரப்பினரும் விமர்சனம் செய்தது குறிப்பிடத்தக்கது.


Next Story

மேலும் செய்திகள்