Today Headlines | காலை 6 மணி தலைப்புச் செய்திகள் (27.01.2026) | 6 AM Headlines | Thanthi TV
ஜனநாயகன் சென்சார் வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்குகிறது. படம் சென்சார் குழுவின் மறு ஆய்வுக்கு அனுப்பப்படுமா? அல்லது உடனடியாக சென்சார் வழங்க நீதிமன்றம் உத்தரவிடுமா என எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
அல்லு அர்ஜுன் படத்திற்கு பின் விக்ரம் 2, கைதி 2 மற்றும் ரோலக்ஸ் படங்களை நிச்சயம் இயக்குவேன் என்று இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தெரிவித்துள்ளார்... லைட் ஹார்ட் படமாக கேட்டதால் ரஜினி மற்றும் கமல் சேர்ந்து நடிக்கும் படத்தை இயக்க முடியவில்லை என்றும் அவர் கூறியுள்ளார்...
ஆபரண தங்கம் விலை சவரனுக்கு 2 ஆயிரத்து 200 ரூபாய் அதிகரித்துள்ளது. ஒரு சவரன் தங்கம் 1 லட்சத்து 20 ஆயிரத்து 200 ரூபாய்க்கும் ஒரு கிராம் 15 ஆயிரத்து 25 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
நாடு முழுவதும் உள்ள பொதுத்துறை வங்கி ஊழியர்கள் இன்று வேலைநிறுத்தப் போராட்டத்தை அறிவித்துள்ளனர்... வாரத்தில் 5 நாட்கள் வேலை முறையை அமல்படுத்த வேண்டும் என்ற நீண்டகாலக் கோரிக்கையை வலியுறுத்தி இந்தப் போராட்டம் நடைபெறுகிறது.

தேர்தலில் போட்டியிட விருப்ப மனு அளித்தவர்களிடம் இன்று முதல் நேர்காணல் நடத்துகிறார் பாமக தலைவர் அன்புமணி... அன்புமணி தரப்பில் போட்டியிட 500க்கும் மேற்பட்டோர் விருப்ப மனு அளித்த நிலையில், பனையூரில் உள்ள பாமக அலுவலகத்தில் நேர்காணல் நடைபெறுகிறது...