Today Headlines | இரவு 7 மணி தலைப்புச் செய்திகள் (30.09.2026) | 7 PM Headlines | ThanthiTV

இரவு 7 மணி தலைப்புச் செய்திகள் (30.09.2026) | 7 PM Headlines | ThanthiTV

Today Headlines | இரவு 7 மணி தலைப்புச் செய்திகள் (30.09.2026) | 7 PM Headlines | ThanthiTV #todayheadlines #headlines #headlinestamil #headlinestoday #tamilheadlines

தமிழ்நாட்டில் முன்பு 'அம்மா ஆட்சி' நடந்ததாகவும், அதன்பின் 'அப்பா ஆட்சி' நடந்ததாகவும் சுட்டிக்காட்டிய முதலமைச்சர் விஜய், தற்போது நடப்பது 'பிள்ளைகளின் ஆட்சி' எனக் குறிப்பிட்டுள்ளார்...

எம்.ஜி.ஆரும், ஜெயலலிதாவும் எந்த திமுகவை எதிர்த்துக் கட்சி நடத்தி அரசியல் செய்தார்களோ, அதே திமுகவுடன் எடப்பாடி பழனிசாமி கூட்டணி பேசுவதாக முதலமைச்சர் விஜய் விமர்சித்துள்ளார்...

திமுக தலைவர்களைத் தாங்கள் கண்ணியத்துடனும் மரியாதையுடனும் பேசி வரும் நிலையில், அவர்கள் தங்களை ஒருமையில் பேசி தரம் தாழ்ந்து விமர்சித்து வருவதாக முதலமைச்சர் விஜய் தெரிவித்துள்ளார்...

vஅண்ணா காலத்து எளிய மனிதர்களைக் கொண்டு மன்னர்களைத் தோற்கடித்த வரலாற்றைச் சுட்டிக்காட்டிப் பேசிய துரைமுருகனின் கருத்தைக் குறிப்பிட்ட முதலமைச்சர் விஜய், அதே வரலாறு தற்போது மீண்டும் திரும்பியுள்ளதாகத் தெரிவித்துள்ளார்...

நாங்கள் கிருஷ்ண ஜெயந்திக்கும் வாழ்த்துச் சொல்வோம், கிறிஸ்துமஸ் மற்றும் பக்ரீத் பண்டிகைகளுக்கும் வாழ்த்துகளைத் தெரிவிப்போம் என முதலமைச்சர் விஜய் பேசினார்...

தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம், பயிர்க்கடன் தள்ளுபடி, பால்கொள்முதல் விலை உயர்வு உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை சுட்டிக்காட்டி முதலமைச்சர் விஜய் வாக்கு சேகரித்தார்...

என் நெஞ்சில் குடியிருக்கும் தாராபுரம் மக்களே என முதலமைச்சர் விஜய் தனது உரையை தொடங்கினார்...

தாராபுரம் பிரசார திடலில் இருந்த பரப்புரை வாகனத்தின் மீது தோன்றிய முதலமைச்சர் விஜய்யை கண்டு டிவிகே டிவிகே என தொண்டர்கள் உற்சாக முழக்கமிட்டனர்...

தாராபுரம் பிரசார திடலில் இருந்த பரப்புரை வாகனத்தின் மீது தோன்றிய முதலமைச்சர் விஜய்யை கண்டு டிவிகே டிவிகே என தொண்டர்கள் உற்சாக முழக்கமிட்டனர்...

தாராபுரம் பிரசார திடலுக்கு வந்த முதலமைச்சர் விஜய்யை அமைச்சர்கள் மற்றும் நிர்வாகிகள் சால்வை அணிவித்தும், பூங்கொத்து கொடுத்தும் வரவேற்றனர்...

தாராபுரம் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் தவெக வேட்பாளர் சத்யபாமாவை ஆதரித்து முதலமைச்சர் விஜய் தீவிர பிரசாரம் மேற்கொண்டார்...

X

Thanthi TV
www.thanthitv.com