Today Headlines | இரவு 7 மணி தலைப்புச் செய்திகள் (21.04.2026) | 7 PM Headlines | Thanthi TV

இரவு 7 மணி தலைப்புச் செய்திகள் (21.04.2026)

தமிழ்நாட்டில் சட்டமன்ற தேர்தலுக்கான பிரசாரம் மாலை 6 மணியுடன் நிறைவடைந்தது...

48 மணி நேரத்திற்கு, கூடுதல் தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்தன...

பிரசாரம் ஓய்ந்த நிலையில், வாக்காளர் அல்லாதோர் தொகுதிகளில் இருந்து வெளியேறி வருகின்றனர்..

டிஜிட்டல் பிரசாரங்களுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், விதிமுறைகள் மீறப்பட்டால் 2 ஆண்டுகள் சிறை அல்லது அபராதம் விதிக்கப்படும் என்று தேர்தல் ஆணையம் எச்சரித்துள்ளது..

தமிழ்நாட்டில் உள்ள 234 தொகுதிகளுக்கும் நாளை மறுநாள் ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறுகிறது...

மொத்தம் 4 ஆயிரத்து 23 வேட்பாளர்கள் தேர்தல் களத்தில் உள்ளனர்...

தமிழகம் முழுவதும் மொத்தம் 75 ஆயிரத்து 64 வாக்குச்சாவடி மையங்கள் தயார் நிலையில் உள்ளன...

வாக்குச்சாவடி மையங்களை கண்காணிக்க கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது..

வாக்குப்பதிவு இயந்திரங்கள் நாளை காலை முதல் வாக்குச்சாவடிகளுக்கு கொண்டு செல்லப்படுகின்றன...

இதற்காக ஜிபிஎஸ் பொருத்தப்பட்ட வாகனங்கள் தயார் நிலையில் உள்ளன..

X

Thanthi TV
www.thanthitv.com