Today Headlines | காலை 6 மணி தலைப்புச் செய்திகள் (29.04.2026) | 6 AM Headlines | ThanthiTV
தமிழகத்தில் திருச்சி, வேலூர், ஈரோடு உள்ளிட்ட 13 இடங்களில் நேற்று வெயில் சதமடித்துள்ளது...அதிகபட்சமாக திருச்சியில் 104.9 பாரன்ஹீட் வெப்பம் பதிவாகியுள்ளது...
மேற்கு வங்க இரண்டாம் கட்ட தேர்தலில் முதலமைச்சர் மம்தா பானர்ஜி, சுவேந்து அதிகாரி உள்ளிட்ட 1,448 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்...தேர்தல் நடைபெறும் 142 தொகுதிகளில் சுமார் 3.21 கோடி வாக்காளர்கள் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது...
மேற்குவங்கத்தில் இன்று 142 தொகுதிகளில் இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு நடைபெறும் நிலையில், மழை பெய்ய வாய்ப்பு உள்ளது...வானிலை ஆய்வு மையம் கணிப்பு...
திருச்செந்தூர் முருகன் கோயிலில் தவெக தலைவர் விஜய் சுவாமி தரிசனம் செய்தார்...மே நான்காம் தேதி சட்டமன்ற தேர்தலுக்கான முடிவுகள் வெளியாகும் நிலையில், கையில் வேலுடன் சென்று முருகனை தரிசித்த விஜய்க்கு கோயில் நிர்வாகம் சார்பில் மரியாதை அளிக்கப்பட்டது..
மதுரை சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் இன்று காலை கோலாகலமாக நடைபெறுகிறது..பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பார்கள் என்பதால், 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர்..
கர்நாடக முதலமைச்சராக டி.கே. சிவக்குமார் விரைவில் பொறுப்பேற்பார் என, அம்மாநில காங்கிரஸ் எம்.எல்.ஏ இக்பால் ஹுசைன் கருத்து...மே 15-ல் டி.கே. சிவக்குமார் முதல்வராவார் என அவர் கூறியிருப்பது கர்நாடக மாநில அரசியலில் புயலைக் கிளப்பியுள்ளது...
ஐபிஎல் தொடரின் நேற்றைய லீக் போட்டியில் பஞ்சாப் அணியை வீழ்த்தி ராஜஸ்தான் அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது... இதன்மூலம் நடப்பு ஐபிஎல் தொடரில் பஞ்சாப் கிங்ஸ் அணி முதல் தோல்வியை சந்தித்துள்ளது...
ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் இன்றைய போட்டியில் மும்பை மற்றும் ஹைதராபாத் அணிகள் மோதுகின்றன...மும்பை வான்கடே மைதானத்தில் இரவு 7.30 மணிக்கு போட்டி தொடங்குகிறது...
