Today Headlines | காலை 6 மணி தலைப்புச் செய்திகள் (28.05.2026) | 6AM Headlines | ThanthiTV
பிரதமர் மோடி உடனான சந்திப்பின் போது, நெதர்லாந்தில் இருந்து ஆனைமங்கல செப்பேடுகளை மீட்டு கொண்டு வந்ததற்கு முதல்வர் விஜய் நன்றி தெரிவித்தார்...
டெல்லியில் பிரதமர் மோடி உடன் முதல்வர் விஜய் சந்திப்பு...
முதல்வரான பின் முதல்முறையாக பிரதமரை சந்தித்து, தமிழ்நாட்டின் கோரிக்கைகளை முவைத்தார்...
அரசு நிகழ்ச்சிகளின் தொடக்கத்தில் மாநில வாழ்த்து பாடல் பாட உள்துறை அமைச்சகத்தால் தெளிவுரை வழங்க வேண்டும் என பிரதமரிடம் முதலமைச்சர் விஜய் கோரிக்கை..
மேம்பட்ட நடுத்தர போர் விமான வடிவமைப்பு மேம்பாட்டு மையம் மற்றும் வான்வழி அமைப்பு மையத்தை தமிழ்நாட்டில் அமைக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தார்...
மேகதாது அணைத் திட்டத்திற்கு மத்திய அரசு அனுமதி அளிக்கக்கூடாது என்று பிரதமர் மோடியிடம், முதலமைச்சர் விஜய் வலியுறுத்தியுள்ளார்...
இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்ட மீனவர்கள் மற்றும் படகுகளை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளார்...
பிரதமர் மோடி உடனான சந்திப்பின் போது, நெதர்லாந்தில் இருந்து ஆனைமங்கல செப்பேடுகளை மீட்டு கொண்டு வந்ததற்கு முதல்வர் விஜய் நன்றி தெரிவித்தார்...
மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் உடன் முதலமைச்சர் விஜய் சந்திப்பு...
தமிழகத்திற்கான திட்டங்கள் மற்றும் ஒதுக்க வேண்டிய நிதி தொடர்பாக கோரிக்கை மனு அளித்தார்...
