Today Headlines | காலை 6 மணி தலைப்புச் செய்திகள் (28.04.2026) | 6 AM Headlines | ThanthiTV

Today Headlines | காலை 6 மணி தலைப்புச் செய்திகள் (28.04.2026) | 6 AM Headlines | ThanthiTV
  • மேற்குவங்கத்தில் சட்டமன்ற தேர்தலுக்கான 2ம் கட்டவாக்குப்பதிவு நாளை நடைபெறுகிறது...பிரசாரம் ஓய்ந்த நிலையில்142 தொகுதிகளிலும் வாக்குசாவடி மையங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன....

  • மேற்குவங்க சட்டமன்ற தேர்தலுக்கான இரண்டாம் கட்ட வாக்குப்பதிவை ஒட்டி பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது....பதற்றமான வாக்குச்சாவடிகளில் கூடுதல் பாதுகாப்பு படையினர் குவிக்கப்பட்டு கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது...

  • உத்தரப் பிரதேச மாநிலத்தின் பாண்டா நகரம் 47.6 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையுடன் நாட்டின் மிக வெப்பமான இடமாகப் பதிவாகியுள்ளது...இரண்டாவதாக ராஜஸ்தானின் ஜெய்சல்மரில் 46.4 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது...

  • வெப்ப அலை தாக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ள வேண்டும்...அனைத்து மாநில தலைமை செயலாளர்களுக்கும் மத்திய சுகாதாரத்துறை அறிவுறுத்தல் வழங்கியுள்ளது...

  • அரசியல் நோக்கங்களுக்காகக் குழந்தைகளைப் பகடைக் காய்களாகப் பயன்படுத்துவது கண்டனத்திற்குரியது...தவெகவுக்கு வாக்களிக்குமாறு பெற்றோரிடம் அடம்பிடிக்க வேண்டும் எனக் கூறிய விஜய்க்கு குழந்தைகள் உரிமைகள் கண்காணிப்பகம் கண்டனம்...

  • திருச்செந்தூர் முருகன் கோயிலில் தவெக தலைவர் விஜய் சுவாமி தரிசனம் செய்தார்...மே நான்காம் தேதி சட்டமன்ற தேர்தலுக்கான முடிவுகள் வெளியாகும் நிலையில், முருகனை தரிசித்தார்...

X

Thanthi TV
www.thanthitv.com