Today Headlines | காலை 6 மணி தலைப்புச் செய்திகள் ( 20.03.2026 ) | 6 AM Headlines | ThanthiTV

காலை 6 மணி தலைப்புச் செய்திகள் ( 20.03.2026 ) | 6 AM Headlines

டெல்லி சென்றுள்ள அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா-வை சந்தித்து பேசினார்.....

என்.டி.ஏ. கூட்டணியில் தொகுதி பங்கீடு குறித்து இருவரும் ஆலோசித்ததாக தகவல் வெளியாகி உள்ளது..

டெல்லியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா உடன் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி சுமார் ஒரு மணி நேரம், 15 நிமிடங்கள் ஆலோசனை நடத்தினார்....

என்.டி.ஏ. கூட்டணியில் உள்ள சிறிய கட்சிகள் இரட்டை இலை, அல்லது தாமரை சின்னத்தில் போட்டியிடுவது குறித்து இருவரும் ஆலோசித்ததாக கூறப்படுகிறது....

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை தொடர்ந்து, டிடிவி தினகரனும், அன்புமணி ராமதாஸும் இன்று டெல்லி செல்கின்றனர்...

தொகுதி பங்கீடு குறித்து அமித்ஷாவை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்த உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது...

அத்தியாவசிய பணியில் இருப்பவர்கள் தபால் வாக்கு செலுத்தும் நிலையில் தமிழக அரசின் 5 துறைகளை புதிதாக சேர்த்து தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது...

அரசு போக்குவரத்து கழகம், மின்சாரத்துறை, போக்குவரத்து காவலர்கள், சிறைத்துறை, தீயணைப்பு துறைகள் ஆகியவை சேர்க்கப்பட்டுள்ளன...

சட்டமன்ற தேர்தலையொட்டி, 20 ஆயிரம் துணை ராணுவ வீரர்கள் தமிழகம் வருகை தந்துள்ளனர்...

ஏற்கனவே 50 கம்பெனி துணை ராணுவ வீர‌ர்கள் தமிழகம் வந்துள்ள நிலையில், அவர்களுடன் சேர்ந்து கண்காணிப்பு பணியில் ஈடுபட உள்ளனர்...

X

Thanthi TV
www.thanthitv.com