Today Headlines | காலை 6 மணி தலைப்புச் செய்திகள் (17.05.2026) | 6 AM Headlines | ThanthiTV
தவெக அரசில் அமைச்சர்களாக பொறுப்பேற்றவர்களுக்கு இலாகாக்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது...முதலமைச்சர் விஜய் பொது நிர்வாகம், உள்துறை, ஆட்சிப் பணி, காவல் பணிகளை கவனிக்கிறார்...நகராட்சி நிர்வாகம், இளைஞர் நலன் மற்றும் குடிநீர் வழங்கல் துறைகளும், முதலமைச்சர் விஜய் வசமே உள்ளது..
தவெக பொதுச் செயலாளரும், அமைச்சருமான என்.ஆனந்திற்கு ஊரக வளர்ச்சித்துறை மற்றும் நீர்வளத்துறை ஒதுக்கப்பட்டுள்ளது....பஞ்சாயத்து மற்றும் பஞ்சாயத்து யூனியன்கள், வறுமை ஒழிப்புத் திட்டங்கள், மற்றும் சிறு பாசனம் உள்ளிட்ட நீர்ப்பாசனத் திட்டங்கள் துறைகளையும் அவர் கவனிப்பார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது....
ஆட்சி நிர்வாகத்தில் நீண்ட அனுபவம் கொண்ட அமைச்சர் செங்கோட்டையனுக்கு நிதித்துறை ஒதுக்கப்பட்டுள்ளது....நிதி, ஓய்வூதியம் மற்றும் ஓய்வூதியப் படிகள் ஆகியவற்றை அவர் கவனிப்பார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது...
அமைச்சர் ஆதவ் அர்ஜுனா பொதுப்பணித் துறையை கவனிப்பார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.....நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள், மற்றும், முந்தைய ஆட்சியில் உதயநிதி வசமிருந்த விளையாட்டு மேம்பாட்டுத்துறையும் ஆதவ் அர்ஜுனாவுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது...
திருப்பரங்குன்றத்தில் வெற்றி பெற்று அமைச்சரான சி.டி.ஆர். நிர்மல்குமாருக்கு மின்சாரம் மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மேம்பாடு துறை ஒதுக்கப்பட்டுள்ளது....சட்டத்துறை, நீதிமன்றங்கள், சிறைச்சாலைகள், ஊழல் தடுப்புப் பிரிவு, சட்டமன்றம் மற்றும் தேர்தல்கள் துறைகளும் அவர் வசம் உள்ளது...
முதல் முறை அமைச்சரான ராஜ்மோகனுக்கு பள்ளிக் கல்வித்துறை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.....தொல்லியல் துறை, தமிழ் ஆட்சி மொழி மற்றும் தமிழ்ப் பண்பாடு, செய்தி மற்றும் விளம்பரத்துறை, திரைப்படத் தொழில்நுட்பம் ஆகிய துறைகளும் அவருக்கு ஒதுக்கப்பட்டுள்ளது...
காரைக்குடியில் சீமானை வீழ்த்தி அமைச்சரான டி.கே. பிரபுவுக்கு இயற்கை வளங்கள் துறை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது...
மயிலாப்பூரில் வெற்றி பெற்று அமைச்சரான வெங்கட்ரமணனுக்கு உணவு வழங்கல் துறை ஒதுக்கப்பட்டுள்ளது
நெதர்லாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட பிரதமர் மோடி, அந்நாட்டு பிரதமர் ராப் ஜெட்டனை சந்தித்து கலந்துரையாடினார்...பாதுகாப்பு, விண்வெளித் துறை மற்றும் கடல்சார் பாதுகாப்பிற்கு முன்னுரிமை அளிக்க இரு நாட்டுப் பிரதமர்கள் உறுதி அளித்தனர்...
