Today Headlines | காலை 6 மணி தலைப்புச் செய்திகள் (17.03.2026) | 6 AM Headlines | ThanthiTV

Today Headlines | காலை 6 மணி தலைப்புச் செய்திகள் (17.03.2026) | 6 AM Headlines | ThanthiTV
  • தமிழகச் சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு 'சுவிதா 2.0' என்ற செயலியை இந்தியத் தேர்தல் ஆணையம் அறிமுகப்படுத்தியுள்ளது...வேட்புமனுத் தாக்கல் செய்யும் நடைமுறையை எளிமையாக்கும் வகையில் சொத்து விவரங்கள், பிரமாண பத்திரங்களை ஆன்லைனிலேயே பதிவேற்றும் வகையில் செயல்படுத்தப்பட்டுள்ளது...

  • தேர்தல் நடத்தை விதிகளை அமல்படுத்துவதில் அதிகாரிகள் பாரபட்சமின்றி செயல்பட வேண்டும் என்று தலைமை தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது..அரசு, தனியார் சுவர்களில் உள்ள அரசியல் விளம்பரங்களை கட்டாயம் அகற்ற வேண்டும் என்று அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது...

  • தமிழகத்தில் இறுதி வாக்காளர் பட்டியலில் 5 கோடியே 69 லட்சம் வாக்காளர்கள் உள்ளதாக மாநில தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் தெரிவித்துள்ளார்....மார்ச் 26 வரை வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க விண்ணப்பிக்கலாம் என்றும் அவர் கூறியுள்ளார்...

  • தமிழகத்தில் தேர்தல் நடத்தை விதிகள் அமலானதை தொடர்ந்து, மாநிலம் முழுவதும் பறக்கும் படை போலீஸார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்....பல்வேறு ஊர்களில், உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரொக்கப் பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது...

  • 2026 தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான திமுக வேட்பாளர் நேர்காணல், சென்னை அண்ணா அறிவாலயத்தில் இன்று தொடங்குகிறது...முதல் நாளான இன்று புதுச்சேரி மற்றும் காரைக்கால் மாவட்டங்களைச் சேர்ந்த விருப்ப மனுதாரர்களிடம் நேர்காணல் நடத்தப்படுகிறது...

  • கரூர் கூட்ட நெரிசல் வழக்கு தொடர்பாக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி இன்று டெல்லியில் உள்ள சிபிஐ தலைமையகத்தில் விசாரணைக்கு ஆஜராகிறார்...தவெக தலைவர் விஜய்யிடம் விசாரணை நடத்தப்பட்ட நிலையில், செந்தில்பாலாஜியிடம் இன்று விசாரணை நடைபெறுகிறது...

  • நடிகர் ரஜினிகாந்த் குறித்து தவெக நிர்வாகி ஆதவ் அர்ஜுனா கூறிய கருத்துக்கு மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், நயினார் நாகேந்திரன் உள்ளிட்டோர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.ரஜினியிடம் விஜய் மற்றும் ஆதவ் அர்ஜுனா மன்னிப்பு கேட்க வேண்டும் என அவர்கள் கூறியுள்ளனர்.

X

Thanthi TV
www.thanthitv.com