Today Headlines | காலை 6 மணி தலைப்புச் செய்திகள் (16.03.2026) | 6 AM Headlines | ThanthiTV
தமிழ்நாட்டில் 234 தொகுதிகளிலும் ஒரே கட்டமாக ஏப்ரல் 23ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது...மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது...
புதுச்சேரியில் ஒரே கட்டமாக ஏப்ரல் 9ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது...இன்று வேட்பு மனு தாக்கல் தொடங்குகிறது...
கேரளத்தில் ஏப்ரல் 9ஆம் தேதி ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறுகிறது...
மேற்குவங்கத்தில் 2 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறுகிறது...முதல்கட்ட வாக்குப்பதிவு ஏப்ரல் 23ஆம் தேதியும், இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு 29ஆம் தேதியும் நடைபெற உள்ளது...
அசாமில் ஒரே கட்டமாக ஏப்ரல் 9ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது...
தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா, மேற்குவங்கம், அசாம் ஆகிய 5 மாநிலங்களிலும் மே 4 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது...
வரும் தேர்தலில் தபால் வாக்கு எண்ணிக்கை முறையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது...வழக்கமாக முதலில் தபால் ஓட்டுகள் எண்ணப்படும் நிலையில், இந்த முறை கடைசி சுற்றுக்கு முன்பாக எண்ணப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது...
EVMல் வேட்பாளர்களின் வண்ணப் புகைப்படங்கள் வாக்குப்பதிவு இயந்திரங்களில் முதல்முறையாக வேட்பாளர்களின் வண்ணப் புகைப்படங்கள் இடம்பெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது...
வாக்குச்சாவடிகளில் குடிநீர், கழிப்பறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து கொடுக்கப்படும்...வாக்குச்சாவடிகளில் செல்போனை வைத்து செல்ல பாதுகாப்பு அறை அமைக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது...
ஒவ்வொரு வாக்குசாவடியிலும் ஆயிரத்து 200 பேர் மட்டுமே வாக்களிக்க கூடிய வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது...தேனி வருசநாடு மலைப்பகுதிகளில் உள்ள வெள்ளிமலையில் 5 பேர் மட்டும் வாக்களிக்க வாக்குச்சாவடி அமைக்கப்பட்டுள்ளதாக தலைமை தேர்தல் ஆணையம் ஞானேஷ் குமார் தெரிவித்துள்ளார்...
தேர்தல் தொடர்பான அனைத்து தகவல்களையும் ECI NET என்ற ஒரே செயலியில் தெரிந்து கொள்ளலாம்...2 மணி நேரத்திற்கு ஒருமுறை வாக்கு சதவீதம் வெளியிடப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது...
