Today Headlines | காலை 6 மணி தலைப்புச் செய்திகள் (14.05.2026) | 6AM Headlines | ThanthiTV

Today Headlines | காலை 6 மணி தலைப்புச் செய்திகள் (14.05.2026) | 6AM Headlines | ThanthiTV
  • நம்பிக்கை வாக்கெடுப்பில் காங்கிரஸ் கட்சி எம்.எல்.ஏ.க்கள் விஜய் அரசுக்கு ஆதரவாக வாக்களித்தனர்...அரசுக்கு பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்த விசிக, இடதுசாரிகள் மற்றும் இந்திய யூனியன் முஸ்லீம் கட்சி எம்.எல்.ஏ.க்களும் தவெக அரசுக்கு ஆதரவு தெரிவித்தனர்...

  • முதலமைச்சர் விஜய்க்கு ஆதரவளித்த எஸ்.பி. வேலுமணி தரப்பு 25 அதிமுக எம்.எல்.ஏ.க்களின் கட்சிப் பதவிகளை பறித்து ஈபிஎஸ் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளார்...சி.வி.சண்முகம், எஸ்.பி.வேலுமணி, விஜயபாஸ்கர், நத்தம் விஸ்வநாதன், தங்கமணி உள்ளிட்ட பலரின் பதவிகள் பறிக்கப்பட்ட நிலையில், மாவட்ட செயலாளர்களை மாற்றம் செய்தும் உத்தரவிட்டுள்ளார்...

  • விஜய் அரசு மீதான நம்பிக்கை வாக்கெடுப்பில் பங்கேற்காமல் பாமக-வின் 4 எம்.எல்.ஏ.-க்கள் நடுநிலை வகித்தனர்...ஒரே ஒரு எம்.எல்.ஏ.-வை கொண்டுள்ள பாஜக-வும் நம்பிக்கை வாக்கெடுப்பில் நடுநிலை வகிப்பதாக கூறி வெளியேறியது...

  • சட்டமன்ற தேர்தலில் தவெகவுக்கு நூலிழை வித்தியாசத்தில் தான் பெரும்பான்மை கிடைக்கவில்லை என்று முதலமைச்சர் விஜய் கூறினார்...ஒரு கோடியே 72 லட்சம் பேர் தவெகவுக்கு ஆதரவு அளித்திருப்பதாகவும், கட்சி தொடங்கி 3 ஆண்டுகளில் ஆட்சியை பிடித்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்...

  • தவெகவை மைனாரிட்டி அரசு என்று விமர்சித்த எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின்...அதற்கு பதிலடி கொடுத்த முதலமைச்சர் விஜய், நாங்கள் மைனாரிட்டி அரசு தான், மைனாரிட்டி சமூக மக்களுக்கான அரசு என்று விளக்கம் அளித்தார்...

X

Thanthi TV
www.thanthitv.com