Today Headlines | காலை 6 மணி தலைப்புச் செய்திகள் (13.04.2026) | 6 AM Headlines | Thanthi TV

காலை 6 மணி தலைப்புச் செய்திகள் (13.04.2026)

தமிழக சட்டமன்ற தேர்தலையொட்டி 85 வயதுக்கு மேற்பட்ட முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு தபால் வாக்குப்பதிவு தொடங்கியது...

வாக்குச்சாவடி அலுவலர்கள் வீட்டிற்கு சென்று வாக்குகளை பெறுகின்றனர்....

தமிழகம் முழுவதும் வாக்காளர்களுக்கு பூத் சிலிப் விநியோகிக்கும் பணி தொடங்கி உள்ளது...

பி.எல்.ஓ.க்கள் வீடு வீடாக சென்று பூத் சிலிப்பை வழங்கி வரும் நிலையில் வரும் 18 ஆம் தேதிக்குள் முடிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது...

தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை டிஜிபி பொறுப்பை ஐஜி துரைகுமார் கவனிப்பார் என அறிவிக்கப்பட்டுள்ளது....

லஞ்ச ஒழிப்புத்துறையின் புதிய டிஜிபி சந்திப் மிட்டல் விடுவிக்கப்பட்ட நிலையில் தமிழக உள்துறை செயலாளர் உத்தரவிட்டுள்ளார்....

சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் 9 நாட்களே உள்ளதால் தமிழகம் முழுவதும் அனல் பறக்கும் பிரசாரம்...

பிரதமர் மோடி, ராகுல் காந்தி உள்ளிட்ட தலைவர்கள் அடுத்தடுத்து தமிழகம் வரவுள்ள நிலையில் தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது...

தமிழகத்தின் உரிமைக்காக ஒரு முறையாவது ஈபிஎஸ் பேசியுள்ளாரா என்று முதலமைச்சர் ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்..

தேர்தல் பிரசாரத்தில் கண்ணியமின்றி ஈபிஎஸ் பேசுவதாகவும் பரமக்குடி பிரசாரத்தில் முதல்வர் குற்றம்சாட்டினார்...

X

Thanthi TV
www.thanthitv.com