Today Headlines | காலை 6 மணி தலைப்புச் செய்திகள் (12.05.2026) | 6 AM Headlines | ThanthiTV

Today Headlines | காலை 6 மணி தலைப்புச் செய்திகள் (12.05.2026) | 6 AM Headlines | ThanthiTV
  • மேற்கு ஆசியாவில் நிலவும் போர்ச் சூழல் இந்த தசாப்தத்தின் மிகப்பெரிய நெருக்கடி என பிரதமர் மோடி குறிப்பிட்டுள்ளார்..குஜராத்தில் உரையாற்றிய அவர், மக்களின் ஒற்றுமையால் இந்த இக்கட்டான காலத்தை கடப்போம் என உறுதிபடத் தெரிவித்துள்ளார்.

  • மேற்கு ஆசிய போரைத் தொடர்ந்து சர்வதேச அளவில் ஏற்பட்டு நிலைத்தன்மையால் கச்சா எண்ணெய் விலை அதிகரிக்கலாம் என தகவல்கள் வெளியாகி உள்ளன...பிரதமர் மோடியும் அலர்ட் கொடுத்துள்ள சூழலில் பெட்ரோல், டீசல் விலை உயரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது...

  • அதிமுகவில் பிளவு ஏதும் இல்லை என அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்....தவறான தகவல் பரப்பப்படுவதாக ஈபிஎஸ் கூறியுள்ளார்....

  • தமிழக சட்டப்பேரவை சபாநாயகராக ஆயிரம் விளக்கு தவெக எம்.எல்.ஏ ஜேசிடி பிரபாகர் இன்று பதவியேற்கிறார்...துணை சபாநாயகராக துறையூர் தவெக எம்.எல்.ஏ ரவிசங்கர் பதவியேற்க உள்ளார்..

  • தமிழ்நாட்டில் வழிபாட்டுத் தலங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு அருகில் இயங்கி வரும் டாஸ்மாக் கடைகளைக் கணக்கெடுக்கும் பணி தொடங்கியுள்ளது...500 மீட்டர் எல்லைக்குள் அமைந்துள்ள மதுக்கடைகள் குறித்து விரிவான அறிக்கை தயார் செய்ய மாவட்ட ஆட்சியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது...

  • இந்த மாதத்தின் இறுதியில் டெல்லி சென்று குடியரசு தலைவர் மற்றும் பிரதமரை சந்திக்க முதலமைச்சர் விஜய் திட்டமிட்டுள்ளார்...மத்திய அமைச்சர்கள் அமித்ஷா மற்றும் நிர்மலா சீதாராமனை சந்திக்கும் விஜய், தமிழக நலன் குறித்த கோரிக்கைகளையும் முன்வைக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது..

  • சென்னை ஆழ்வார்ப்பேட்டை இல்லத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை, முதலமைச்சர் விஜய் நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார்...முதலமைச்சர் விஜயை, மு.க.ஸ்டாலின் ஆரத்தழுவி வரவேற்ற நிலையில், இருவரும் பரஸ்பர சால்வை அணிவித்தனர்...

  • ஆழ்வார்பேட்டை இல்லம் வந்த முதலமைச்சர் விஜய்க்கு, எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் காலத்தின் நிறம் கருப்பு சிவப்பு என்ற புத்தகத்தை வழங்கி வாழ்த்து தெரிவித்தார்...முன்னதாக முதல்வர் விஜய்யை வீட்டு வாசலில் கட்டியணைத்து உதயநிதி ஸ்டாலின் வரவேற்றார்...

  • சென்னை அண்ணாநகரில் உள்ள இல்லத்தில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோவை, முதலமைச்சர் விஜய் சந்தித்து வாழ்த்து பெற்றார்...மதிமுக முதன்மைச் செயலாளர் துரை வைகோ, முதலமைச்சர் விஜய்க்கு மாலை அணிவித்து மரியாதை செய்தார்...

X

Thanthi TV
www.thanthitv.com