Today Headlines | மாலை 4 மணி தலைப்புச் செய்திகள் (11.04.2026) | 4 PM Headlines | Thanthi TV

மாலை 4 மணி தலைப்புச் செய்திகள் (11.04.2026)

தமிழக உள்துறை செயலாளர் தீரஜ் குமாரை தேர்தல் ஆணையம் அதிரடியாக மாற்றியுள்ளது....

புதிய உள்துறை செயலாளராக மணிவாசன் ஐஏஎஸ் நியமிக்கப்பட்டுள்ளார்....

சென்னையில் காவல்துறையினர் தபால் வாக்கு செலுத்துவதற்கான தேதி மாற்றப்பட்டுள்ளது.

வருகிற 18, 20ம் தேதிகளில் காவல்துறையினர் தங்களது தபால் வாக்குகளை பதிவு செய்யலாம் என சென்னை காவல்துறை தெரிவித்துள்ளது....

சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் பறக்கும் படை சோதனையில் இருபத்து எட்டரை கோடி ரூபாய் மதிப்பிலான தங்கம், 60 லட்சம் மதிப்புள்ள வெள்ளி பொருட்கள் சிக்கின....

பறிமுதல் செய்யப்பட்ட தங்கம், வெள்ளியை வருமான வரித்துறையிடம் அதிகாரிகள் ஒப்படைத்தனர்.

புதுச்சேரி சட்டமன்ற தேர்தலில் கள்ள ஓட்டு போட்ட‌தாக விழுப்புரத்தை சேர்ந்த இளைஞர் ஒருவர் கைது...

ஆள்மாறாட்டம் செய்து மன்னாடிபட்டு தொகுதியில் கள்ள ஓட்டு போட்ட‌தாக கூறப்படுகிறது..

புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலையில் நடைப்பயிற்சியின்போது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாக்கு சேகரித்தார்...

பொதுமக்களை சந்தித்தும் முதலமைச்சர் கலந்துரையாடினார்.

X

Thanthi TV
www.thanthitv.com