Today Headlines | மாலை 4 மணி தலைப்புச் செய்திகள் (01.10.2026) | 4 PM Headlines | ThanthiTV

மாலை 4 மணி தலைப்புச் செய்திகள் (01.10.2026) | 4 PM Headlines | ThanthiTV
Today's Headlines | 4 PM Headlines (01.10.2026) | ThanthiTV
Published on: 

Today Headlines | மாலை 4 மணி தலைப்புச் செய்திகள் (01.10.2026) | 4 PM Headlines | ThanthiTV

தான் செல்லும் கான்வாய்க்காக ஆம்புலன்ஸ் தடுத்து நிறுத்தப்பட்ட சம்பவத்திற்கு அசாம் முதல்வர் ஹிமாந்த பிஸ்வா சர்மா பகிரங்கமாக மன்னிப்பு கோரியுள்ளார்...

திருப்பரங்குன்றம் மலையில் தீபம் ஏற்றுவது தொடர்பான வழக்கில் தொல்லியல் துறை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் பதில் மனுத் தாக்கல் செய்துள்ளது...

'என் இனிய பொன் நிலாவே' பாடல் காப்புரிமை விவகாரத்தில், இளையராஜாவின் மனுவை விசாரிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு...

போக்சோ வழக்கில் கைதான ஜெம் வீரமணி உட்பட மூன்று பேர் மீதும் குண்டர் சட்டம் பாய்ந்தது...

கடலூரில் உள்ள மகளிர் கல்லூரியில் நடைபெறும் பட்டமளிப்பு விழாவில், விசிக தலைவர் திருமாவளவன் பங்கேற்பு...

உயிரைப் பணயம் வைத்து 180 பேரை காப்பாற்றிய விமானி ஸ்மித் மச்சாரின் குடும்பத்தினருடன், UAE-ன் இந்திய தூதர் சந்திப்பு...

எக்ஸ்பிரஸ், டீலக்ஸ் பேருந்துகளிலும் பெண்கள் இலவசமாக பயணிக்கும், வெற்றி பயணம் திட்டத்தை, முதலமைச்சர் விஜய் நாளை தொடங்கி வைக்கிறார்...

டெல்லியில் நடைபெற்ற UPSC அமைப்பின் நூற்றாண்டு நிறைவு விழாவில் பங்கேற்ற பிரதமர் மோதி, நினைவு நாணயம் மற்றும் அஞ்சல் தலையை வெளியிட்டார்...

தமிழகத்தில் அக்டோபர்15 முதல் 21ஆம் தேதிக்குள் வடகிழக்கு பருவமழை தொடங்க வாய்ப்பு....

X

Thanthi TV
www.thanthitv.com