Today Headlines | மதியம் 3 மணி தலைப்புச் செய்திகள் (29.09.2026) | 3 PM Headlines | ThanthiTV

மதியம் 3 மணி தலைப்புச் செய்திகள் (29.09.2026) | 3 PM Headlines | ThanthiTV

Today Headlines | மதியம் 3 மணி தலைப்புச் செய்திகள் (29.09.2026) | 3 PM Headlines | ThanthiTV #todayheadlines #headlines #headlinestamil #headlinestoday #tamilheadlines

திருவாரூரில் நெஞ்செரிச்சலுக்காக, மெடிக்கல்லில் மருந்து வாங்கிக் கொண்டிருந்தபோது மயங்கி விழுந்த கேபிள் டிவி உரிமையாளர் பரிதாபமாக உயிரிழப்பு..

நெல்லை கவின் ஆணவப் படுகொலை வழக்கில், கைது செய்யப்பட்ட சுர்ஜித்தின் பெற்றோர் மீது தாக்கல் செய்யப்பட்ட குற்றப்பத்திரிக்கையை ரத்து செய்து உயர்நீதிமன்ற மதுரை அமர்வு உத்தரவு...

சென்னை பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம் அமைப்பது தொடர்பாக வெளியிடப்பட்ட அரசாணையை கைவிட வலியுறுத்தி மீனவ அமைப்புகளின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்.....

மேகமலை புலிகள் காப்பக விரிவாக்கத்தால் மக்கள் வெளியேற்றப்படுவதற்கு எதிராகக் கடமலைக்குண்டில் 4வது நாளாக போராட்டம்...

தேர்தல் ஆணையத்தின் எஸ்.ஐ.ஆர். விவகாரத்தில் கூட்டணி கட்சிகளின் நிலைப்பாடே, தவெக-வின் நிலைப்பாடு என்று அமைச்சர் ராஜ்மோகன் விளக்கம்....

இரண்டு தொகுதி இடைத்தேர்தலில் திமுக, அதிமுக மறைமுக கூட்டணி அமைத்துள்ளதாக அமைச்சர் ஆதவ் அர்ஜுனா குற்றச்சாட்டு....

தாராபுரம் இடைத்தேர்தல் பிரசாரத்திற்காக அமைக்கப்பட்டு வரும் மேடை மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகளை அமைச்சர்கள் நேரில் ஆய்வு செய்தனர்...

மகளிருக்கான கட்டணமில்லா விடியல் திட்டப் பயணத்தால் பாதிக்கப்படுவதாக கூறி, தனியார் பேருந்து உரிமையாளர்கள் அறிவித்த ஒரு நாள் வேலைநிறுத்தம் ஒத்திவைப்பு....

ஈரோடு, திண்டுக்கல், மதுரை ஆகிய மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்...

X

Thanthi TV
www.thanthitv.com