Today Headlines | காலை 11 மணி தலைப்புச் செய்திகள் (30.03.2026) | 11 AM Headlines | Thanthi TV
தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் தொடங்கியுள்ளது....ஏப்ரல் ஆறாம் தேதி வேட்புமனு தாக்கல் நிறைவடைந்து ஏழாம் தேதி மனுக்கள் மீது பரிசீலனை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது..
பீகார் முதலமைச்சர் நிதிஷ் குமார் தமது சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தார்.....நிதிஷ்குமார் மாநிலங்களவை எம்.பி.-யாக தேர்வாகியுள்ள நிலையில் பீகாரின் புதிய முதல்வர் விரைவில் அறிவிக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.....
சர்வதேச சந்தையில் ஒரு பேரல் கச்சா எண்ணெய் விலை 115 அமெரிக்க டாலரை தாண்டியுள்ளது.....மேற்காசியாவில் போர் பதற்றம் நீடிப்பதால், கச்சா எண்ணெய் விலை மேலும் அதிகரிக்கக் கூடும் என்று அஞ்சப்படுகிறது.....
வார வர்த்தகத்தின் முதல் நாளில் இந்திய பங்குச் சந்தைகள் சரிவுடன் தொடங்கியுள்ளன......மும்பை பங்குச் சந்தை குறியீடான சென்செக்ஸ் ஆயிரம் புள்ளிகளுக்கும் மேல் வீழ்ச்சியடைந்ததால் முதலீட்டாளர்கள் கலக்கம் அடைந்துள்ளனர்....
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 480 ரூபாய் குறைந்துள்ளது...ஒரு கிராம்13 ஆயிரத்து 600 ரூபாய்க்கும், ஒரு சவரன் தங்கம் ஒரு லட்சத்து 8 ஆயிரத்து 800 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது...
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை உயர்ந்த நிலையில் வெள்ளி விலை மாற்றமின்றி விற்பனையாகிறது.....ஒரு கிராம் வெள்ளி 250 ரூபாயாக்கும், ஒரு கிலோ கட்டி வெள்ளி 2 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது....
