Today Headlines | காலை 11 மணி தலைப்புச் செய்திகள் (29.04.2026) | 11 AM Headlines | ThanthiTV
மேற்கு வங்க மாநிலத்தில் 2ம் கட்ட தேர்தலுக்கான வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது....142 தொகுதிகளில் ஆயிரத்து 448 வேட்பாளர்கள் போட்டியிடும் நிலையில் மூன்று கோடிக்கும் அதிகமானோர் ஜனநாயக கடமையாற்ற உள்ளனர்...
இறுதிகட்ட தேர்தல் நடைபெற்று வரும் மேற்கு வங்கத்தில் ஆங்காங்கே வன்முறை வெடித்துள்ளதால் பதற்றமான சூழல் நிலவுகிறது...வன்முறை சம்பவங்கள் ஈடுபடுவோரை போலீஸ் மற்றும் துணை ராணுவத்தினர் தடியடி நடத்தி கலைத்து வருகின்றனர்..
சென்னையில் ஆபரணத் தங்கத்தில் விலை சவரனுக்கு ஆயிரத்து 200 ரூபாய் குறைந்துள்ளது....ஒரு கிராம் 13 ஆயிரத்து 950 ரூபாய்க்கும், ஒரு சவரன் தங்கம் ஒரு லட்சத்து 11 ஆயிரத்து 600 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது....
மதுரை சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் இன்று காலை கோலாகலமாக தொடங்கியது...பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் உற்சாகத்துடன் தேரை வடம் பிடித்து இழுத்து வருகின்றனர்...
கொடைக்கானலில் நான்கு நாட்கள் தங்கி ஓய்வு எடுத்த முதல்வர் ஸ்டாலின், சாலை மார்க்கமாக மதுரை கிளம்பினார்...தங்கும் விடுதி வாசலில் காத்திருந்த சுற்றுலாப் பயணிகள் முதல்வருடன் புகைப்படம் எடுத்துக்கொண்டனர்...
உத்தரப் பிரதேசத்தில் உள்ள தமது சொந்த தொகுதியான வாரணாசிக்கு சென்றுள்ள பிரதமர் மோடி, காசி விஸ்வநாதர் ஆலயத்தில் சிறப்பு வழிபாடு நடத்தினார்....மூலவரான சிவலிங்கத்திற்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனைகள் செய்து பிரதமர் வழிபட்டார்...
தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய், மகாராஷ்டிராவில் உள்ள ஷீரடி சாய்பாபா கோயிலில் இன்று வழிபாடு நடத்துகிறார்.....சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் அவர் ஷீரடிக்கு செல்கிறார்..
