Today Headlines | காலை 11 மணி தலைப்புச் செய்திகள் (27.04.2026)| 11 AM Headlines | ThanthiTV
நீட் தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியான நிலையில், தொழில்நுட்பக் கோளாறு காரணமாக இணையதளத்தில் இருந்து ஹால் டிக்கெட்டை பதிவிறக்கம் செய்ய முடியாமல் மாணவர்கள் தவிப்புக்கு உள்ளாகி இருக்கின்றனர்..11 லட்சத்திற்கும் அதிகமானோர் இதுவரை ஹால் டிக்கெட் பதிவிறக்கம் செய்துள்ளதாக தேசிய தேர்வு முகமை தெரிவித்துள்ளது...
வார வர்த்தகத்தின் முதல் நாளில் சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 240 ரூபாய் உயர்ந்துள்ளது....ஒரு கிராம் 14 ஆயிரத்து 230 ரூபாய்க்கும், ஒரு சவரன் தங்கம் ஒரு லட்சத்து 13 ஆயிரத்து 840 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது....
சென்னையில் கோடை வெயில் சுட்டெரிக்க தொடங்கியுள்ளதால் குடிநீர் தேவை அதிகரித்துள்ளது...ஏரிகளில் 69 சதவீதம் நீர் இருப்பு உள்ளதால், சென்னையில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்பில்லை என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.....
சென்னை கோயம்பேடு மொத்த காய்கறி சந்தையில் கடந்த சில நாட்களாக காய்கறிகளின் விலை அதிகரித்து வந்த நிலையில், இன்று வரத்து அதிகரிப்பால் விலை குறைந்துள்ளது...நேற்றைய விலையில் இருந்து எலுமிச்சை கிலோவுக்கு 20 ரூபாயும், பீன்ஸ் 30 ரூபாயும், தக்காளி 10 ரூபாயும் விலை குறைந்து விற்பனை செய்யப்படுகிறது..
டெல்லி மதுபானாக் கொள்கை முறைகேடு வழக்கில் நீதிபதி ஸ்வர்ண காந்தா ஷர்மா முன்பு விசாரணைக்கு ஆஜராக மாட்டேன் என்று முன்னாள் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்...நீதிபதி மீதான நம்பிக்கையை இழந்துவிட்டதாகவும், காந்திய வழியில் சத்தியாகிரகம் மேற்கொள்ளப்போவதாகவும் டெல்லி உயர்நீதிமன்ற நீதிபதி ஸ்வர்ண கந்தாவுக்கு கெஜ்ரிவால் கடிதம் எழுதியுள்ளார்...
எல்.பி.ஜி கேஸ் டேங்கர் லாரி உரிமையாளர்கள் திடீர் வேலைநிறுதத போராட்டத்தை தொடங்கியுள்ளனர்....ஐ.ஓ.சி ஆயில் நிறுவனம் நிலுவை வைத்துள்ள 50 கோடி ரூபாய் வாடகை பாக்கியை உடனடியாக வழங்க வேண்டும் என்று அவர்கள் வலியுறுத்தி உள்ளனர்...
