Today Headlines | காலை 11 மணி தலைப்புச் செய்திகள் (26.03.2026) | 11 AM Headlines | ThanthiTV
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 560 ரூபாய் உயர்ந்துள்ளது... ஒரு கிராம் தங்கம் 13 ஆயிரத்து 670 ரூபாய்க்கும், ஒரு சவரன் ஒரு லட்சத்து 9 ஆயிரத்து 360 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது...
வீட்டு பயன்பாட்டிற்கான சிலிண்டர் முன்பதிவுக்கான காலக்கெடு மாற்றியமைக்கப்பட்டதாக வெளியான தகவலுக்கு மத்திய அரசு மறுப்பு தெரிவித்துள்ளது... சிலிண்டர் முன்பதிவுக்கு நகர்ப்புறங்களில் 25 நாட்கள், கிராமப்புறங்களில் 45 நாட்கள் என்ற நடைமுறை தொடரும் என்றும் அறிவித்துள்ளது...
நயாரா நிறுவன எரிபொருள் நிலையங்களில் பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்பட்டுள்ளது...பெட்ரோல் லிட்டருக்கு 5 ரூபாய் 30 காசுகளும், டீசல் விலை லிட்டருக்கு 3 ரூபாயும் உயர்ந்துள்ளது...
வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பதற்கான காலக்கெடு இன்றுடன் நிறைவு பெறுகிறது... இறுதிப் பட்டியலில் பெயர் இல்லாதவர்கள், உடனடியாக விண்ணப்பித்தால் மட்டுமே வரும் தேர்தலில் வாக்களிக்க முடியும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது...
புதுச்சேரியில் வேட்புமனுவை திரும்ப பெறுவதற்கான அவகாசம் இன்றுடன் நிறைவடைகிறது...திமுக போட்டியிடும் 5 தொகுதிகளில் காங்கிரஸ் வேட்புமனு தாக்கல் செய்துள்ள நிலையில் திரும்ப பெற போவதில்லை என தகவல் வெளியாகி உள்ளது...
