Today Headlines | காலை 11 மணி தலைப்புச் செய்திகள் (25.03.2026) | 11 AM Headlines | ThanthiTV
23 தொகுதிகளுக்கான முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை அதிமுக வெளியிட்டது...
எடப்பாடி தொகுதியில் அதிமுக பொதுச்செயலாளர் ஈபிஎஸ் போட்டியிடும் நிலையில் மூத்த அமைச்சர்கள் அடங்கிய பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது...
முன்னாள் அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன் திண்டுக்கல் தொகுதியிலும்,
நத்தம் விஸ்வநாதன் நத்தம் தொகுதியிலும் போட்டியிடுகின்றனர்...
எஸ்.பி.வேலுமணி தொண்டாமுத்தூர் தொகுதியிலும், ஜெயக்குமார் ராயபுரம் தொகுதியிலும், கே.பி.முனுசாமி வேப்பனஹள்ளி தொகுதியிலும் போட்டியிடுகின்றனர்....
தங்கமணி குமாரபாளையம் தொகுதியிலும், செல்லூர் மதுரை மேற்கு தொகுதியிலும், கே.பி.அன்பழகன் பாலக்கோடு தொகுதியிலும் போட்டியிடுகின்றனர்...
கடம்பூர் ராஜூ கோவில்பட்டி தொகுதியிலும், ஓ.எஸ்.மணியன் வேதாரண்யம் தொகுதியிலும், சி.விஜயபாஸ்கர் விராலிமலை தொகுதியிலும் களம் காண்கின்றனர்...
தங்கம் விலை சவரனுக்கு 2 ஆயிரத்து 800 ரூபாய் அதிகரித்துள்ளது...
ஒரு கிராம் தங்கம் 13 ஆயிரத்து 600 ரூபாய்க்கும், ஒரு சவரன் ஒரு லட்சத்து 8 ஆயிரத்து 800 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது....
தங்கத்தை தொடர்ந்து வெள்ளி விலையும் கிலோவுக்கு10 ஆயிரம் ரூபாய் உயர்ந்தது...
ஒரு கிலோ கட்டி வெள்ளி 2 லட்சத்து 60ஆயிரம் ரூபாய்க்கும் ஒரு கிராம் 260 ரூபாய்க்கும் விற்பனையாகிறது...
