Today Headlines | காலை 11 மணி தலைப்புச் செய்திகள் (21.03.2026) | 11 AM Headlines | ThanthiTV

காலை 11 மணி தலைப்புச் செய்திகள் (21.03.2026)

சி-விஜில் செயலி உதவியுடன் தேர்தல் தொடர்பான புகார்கள் தெரிவித்தால், 100 நிமிடங்களுக்குள் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது...

தேர்தல் தொடர்பான புகார்களை தெரிவிக்க, கட்டணமில்லா தொலைபேசி எண் (1800 425 7012) அறிவிக்கப்பட்டுள்ளது...

புகார் எண் - 1800 425 7012

ஆபரண தங்கம் விலை சவரனுக்கு 2 ஆயிரத்து 640 ரூபாய் குறைந்துள்ளது.

ஒரு சவரன் தங்கம் ஒரு லட்சத்து 8 ஆயிரத்து 960 ரூபாய்க்கும், ஒரு கிராம் தங்கம் 13 ஆயிரத்து 620 ரூபாய்க்கும் விற்பனை ஆகிறது.

தங்கம் விலையைப்போல் வெள்ளி விலையும் குறைந்துள்ளது....

வெள்ளி விலை கிலோவுக்கு 10 ஆயிரம் ரூபாய் குறைந்து ஒரு கிலோ வெள்ளி 2 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.....

நாடு முழுவதும் ரமலான் பண்டிகை கொண்டாட்டம் களைகட்டியுள்ளது.....

தலைநகர் டெல்லியில், கடுங்குளிரையும் பொருட்படுத்தாமல் இஸ்லாமியர்கள் மசூதிகளில் சிறப்பு தொழுகை நடத்தினர்.

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் இஸ்லாமியர்கள் ரமலான் பண்டிகையை கொண்டாடி வருகின்றனர்....

மசூதிகளில் திரண்டு ஆயிரக்கணக்கானோர் சிறப்பு தொழுகையில் ஈடுபட்டனர்...

X

Thanthi TV
www.thanthitv.com