Today Headlines | காலை 11 மணி தலைப்புச் செய்திகள் (18.03.2026) | 11 AM Headlines | ThanthiTV

Today Headlines | காலை 11 மணி தலைப்புச் செய்திகள் (18.03.2026) | 11 AM Headlines | ThanthiTV
Summary
  • திமுக கூட்டணியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது....கடந்த சட்டமன்ற தேர்தலில் 6 தொகுதிகள் வழங்கப்பட்ட நிலையில், தற்போது இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு ஒரு தொகுதி குறைக்கப்பட்டுள்ளது...

  • திமுக கூட்டணியில் பல கட்சிகள் இணைந்துள்ளதால் தொகுதிகளை குறைத்துக் கொண்டதாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் வீரபாண்டியன் விளக்கம் அளித்துள்ளார்..பாஜக-வை வீழ்த்த வேண்டும் என்பதற்காக, திமுக கூட்டணியில் அணி சேர்ந்திருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்...

  • சட்டமன்ற தேர்தல் கூட்டணியில் உள்ள ஆறு கட்சிகளுக்கு திமுக, தொகுதி பங்கீட்டை நிறைவு செய்துள்ளது...காங்கிரஸ், மதிமுக, இந்திய கம்யூனிஸ்ட், கொ.ம.தே.க., ஐ.யூ.எம்.எல்., மனிதநேய மக்கள் கட்சிகளுக்கு ஒட்டுமொத்தமாக 43 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது...

  • சட்டமன்ற தேர்தலில் போட்டியிட விருப்பமனு அளித்தவர்களிடம் திமுக தலைவர் ஸ்டாலின் இரண்டாவது நாளாக நேர்காணல் நடத்தி வருகிறார்....சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெறும் நேர்காணலில் தூத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி, கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்தவர்கள் பங்கேற்றுள்ளனர்...

  • சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் உள்ள நட்சத்திர விடுதியில், தவெக சார்பில் இன்று மாலை இஃப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சி நடைபெறுகிறது..தவெக தலைவர் விஜய் பங்கேற்கும் நிகழ்ச்சியில், அழைப்பிதழ் வழங்கப்பட்ட ஆயிரம் பேருக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படும் என்று கட்சித் தலைமை அறிவித்துள்ளது...

  • தங்கத்தை தொடர்ந்து வெள்ளி விலையும் கிலோவுக்கு 5 ஆயிரம் ரூபாய் குறைந்துள்ளது...ஒரு கிராம் வெள்ளி 275 ரூபாய்க்கும், ஒரு கிலோ வெள்ளி 2 லட்சத்து 75 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனையாகிறது...

  • சர்வதேச சந்தையில் ஒரு பேரல் கச்சா எண்ணெய் விலை 103 அமெரிக்க டாலரை கடந்துள்ளது....ஹார்முஸ் நீரிணையில் கப்பல் போக்குவரத்து தடைபட்டுள்ளதால் கச்சா எண்ணெய் விலை மேலும் அதிகரிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது...

X

Thanthi TV
www.thanthitv.com