Today Headlines | காலை 11 மணி தலைப்புச் செய்திகள் (17.03.2026) | 11 AM Headlines | ThanthiTV
தமிழக சட்டமன்ற தேர்தலில் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் தனித்து போட்டியிட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது...என்.டி.ஏ. கூட்டணியில் விஜய் இணையவுள்ளதாக தகவல் பரவிய நிலையில், தவெக தனித்து போட்டியிட முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது...
சென்னை பனையூரில் உள்ள கட்சி அலுவலகத்தில் தவெக தலைவர் விஜய், இன்று இரண்டாம் கட்ட வேட்பாளர் நேர்காணலை நடத்துகிறார்....சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் பட்டியலை இரண்டு நாட்களில் வெளியிட தவெக திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது..
நெல்லை மாவட்டம் திசையன்விளையில் காருடன் எரிந்த நிலையில் 4 சடலங்கள் மீட்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது....முதற்கட்ட விசாரணையில், உயிரிழந்தவர்கள் சென்னையை சேர்ந்த தம்பதி மற்றும் அவரது குழந்தைகள் என்பது தெரியவந்துள்ளது.
சட்டம் ஒழுங்கு பிரச்சினையில், திமுக அரசைக் கண்டித்து, தமிழகம் முழுவதும் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.....சென்னை விருகம்பாக்கத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பங்கேற்று கண்டன உரையாற்றினார்....
கரூரில் முட்டை ஏற்றி வந்த லாரி ஓட்டுநர் மற்றும், கோழி வியாபாரியிடம் இருந்து 4 லட்சத்து 33 ஆயிரம் ரூபாயை தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்...அரசு கருவூலத்தில் பணம் ஒப்படைக்கப்பட்ட நிலையில், உரிய ஆவணங்களை சமர்ப்பித்து, பணத்தை பெற்றுக்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.....
சென்னையில் இரண்டாவது நாளாக தங்கம் விலை சவரனுக்கு 480 ரூபாய் குறைந்துள்ளது....ஒரு கிராம் 14 ஆயிரத்து 650 ரூபாய்க்கும், ஒரு சவரன் தங்கம் ஒரு லட்சத்து 17 ஆயிரத்து 200 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது....
தங்கத்தை தொடர்ந்து வெள்ளி விலையும் கிலோவுக்கு 4 ஆயிரம் ரூபாய் குறைந்துள்ளது...ஒரு கிராம் வெள்ளி 280 ரூபாய்க்கும், ஒரு கிலோ வெள்ளி 2 லட்சத்து 80 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனையாகிறது...
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியில் வீடு புகுந்து 137 சவரன் தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது...பொதுமக்கள் துரத்தியபோது, தப்பிச் சென்ற கொள்ளையர்களை போலீஸார் தீவிரமாக தேடி வருகின்றனர்..
