Today Headlines | காலை 11 மணி தலைப்புச் செய்திகள் (14.05.2026) | 11 AM Headlines | ThanthiTV
தங்கம் விலை சவரனுக்கு 400 ரூபாய் உயர்ந்துள்ளது...ஒரு கிராம் தங்கம் 15 ஆயிரத்து 50 ரூபாய்க்கும், ஒரு சவரன் ஒரு லட்சத்து 20 ஆயிரத்து 400 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது...
தமிழக டாஸ்மாக் மதுக்கடைகளில் 21 வயதுக்கு உட்பட்டோருக்கு மது விற்கக் கூடாது என உத்தரவிடப்பட்டுள்ளது...மது வாங்க வருபவர்கள் வயதில் சந்தேகம் இருந்தால் ஆதார், ஓட்டுநர் உரிமம் போன்ற ஆவணங்களை சரிபார்க்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது...
சென்னையில் சட்டவிரோத மதுவிற்பனையை கண்காணிக்க காவல் ஆணையர் உத்தரவிட்டுள்ளார்...அனுமதிக்கப்பட்ட நேரமான மதியம்12 மணி முதல் இரவு 10 மணி வரை விற்பனை நடைபெறுவதை உறுதி செய்யவும் ஆணையிட்டுள்ளார்...
மாநில அரசின் நிதிநிலை குறித்து முதலமைச்சர் விஜய் தலைமைச்செயலகத்தில் ஆலோசனை மேற்கொள்கிறார்...வெள்ளை அறிக்கை வெளியிடுவேன் என அறிவித்திருந்த நிலையில், நிதித்துறை செயலாளர் உள்ளிட்ட அதிகாரிகளிடம் கேட்டறிகிறார்...
திமுக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெறுகிறது. தேர்தலுக்குப் பின்பு நடைபெறும் முதல் கூட்டத்தில் அடுத்த கட்ட செயல்பாடுகள் குறித்து ஆலோசனை நடத்துகிறார்...
கட்சிப் பதவி பறிக்கப்பட்டது குறித்து எம்ஆர்சி நகர் அலுவலகத்தில் சி.வி.சண்முகம் தனது ஆதரவு நிர்வாகிகளுடன் சட்ட ஆலோசனை மேற்கொண்டார்...ஈபிஎஸ்-ம் சென்னை கிரீன்வேஸ் இல்லத்தில் தனது ஆதரவாளர்களுடன் ஆலோசனை செய்து வருகிறார்...
கடைசி நேரம் வரை அதிமுகவுடன் தவெக கூட்டணி அமைக்க தயாராக இருந்ததாக சி.வி.சண்முகம் தெரிவித்துள்ளார்...ஆனால் தவெகவுடன் கூட்டணியை விரும்பாத ஈபிஎஸ் அதனை புறக்கணித்துவிட்டார்...
தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு திமுக தலைமையிலான கூட்டணியில் இடம்பெற்ற கட்சித் தலைவர்களுக்கு நன்றி தெரிவித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டுள்ளார்...'கொள்கை உறுதிமிக்க கட்சிகளாக நாம் ஒன்றுபட்டு நின்று மாநில உரிமைகளுக்காகத் தொடர்ந்து போராடுவோம்' என்றும் சூளுரைத்துள்ளார்....
