Today Headlines | காலை 11 மணி தலைப்புச் செய்திகள் (08.04.2026) | 11 AM Headlines | ThanthiTV
ரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றம் இல்லை - ரிசர்வ் வங்கி
வங்கிகளின் குறுகிய கால கடன்களுக்கான வட்டி விகிதம் மாற்றமின்றி 5 புள்ளி 25 விழுக்காடாக தொடரும் என்று ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது....
இந்தியப் பொருளாதாரம் வலுவாக உள்ளதாக ரிசர்வ் வங்கி ஆளுநர் சஞ்சய் மல்ஹோத்ரா தெரிவித்துள்ளார்...
இந்திய பங்குச் சந்தைகள் ஏற்றம் - முதலீட்டாளர்கள் மகிழ்ச்சி
அமெரிக்கா ஈரான் போர் நிறுத்த எதிரொலியாக இந்திய பங்குச் சந்தைகள் ஏற்றம் கண்டுள்ளன....
மும்பை பங்குச் சந்தை குறியீடான சென்செக்ஸ் 2 ஆய்ரிஅத்து 500 புள்ளிகளுக்கும் மேல் உயர்ந்து வர்த்தகம் நடைபெறுவதால் முதலீட்டாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்...
கர்நாடகா அரசு அதிகாரிகள் வீட்டில் ரூ.6.14 கோடி மதிப்பு நகைகள் பறிமுதல்
கர்நாடகாவில் அரசு அதிகாரிகள் வீடுகளில் ஒரே நேரத்தில், லோக் ஆயுக்தா போலீஸார் நடத்திய சோதனையில் 6 கோடியே 14 லட்சம் மதிப்புள்ள ரொக்கப் பணம் மற்றும் தங்க நகைகள் பறிமுதல் செய்யப்பட்டது...
ஊழல் தடுப்பு நடவடிக்கையாக நடத்தப்பட்ட சோதனையின் முடிவில் 8 அதிகாரிகள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது
போர்நிறுத்தம் - கச்சா எண்ணெய் விலை கடும் சரிவு
அமெரிக்கா - ஈரான் இடையே இரண்டு வார கால தற்காலிக போர்நிறுத்தம் அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை கடுமையாக சரிந்துள்ளது...
போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்ட சில நிமிடங்களிலேயே அமெரிக்க கச்சா எண்ணெய் விலை ஒரு பேரலுக்கு நூறு டாலருக்கும் கீழே குறைந்தது...
