Today Headlines | காலை 11 மணி தலைப்புச் செய்திகள் (07.04.2026) | 11 AM Headlines | ThanthiTV
சட்டமன்ற தேர்தல் - வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை தொடங்கியது
தமிழக சட்டமன்ற தேர்தலில் போட்டியிட 7 ஆயிரத்து 600 வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.....
வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை தொடங்கியுள்ள நிலையில், இறுதி வேட்பாளர் பட்டியல் நாளை மறுநாள் வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது...
இறுதி வேட்பாளர் பட்டியல்
நாளை மறுநாள் வெளியாகிறது
பணக்கார வேட்பாளர் லீமாரோஸ் மார்ட்டின் சொத்து மதிப்பு ரூ.1,048 கோடி
தமிழகத்தின் கோடீஸ்வர வேட்பாளர்கள் பட்டியலில் லால்குடி தொகுதி அதிமுக வேட்பாளர் லீமாரோஸ் ஆயிரத்து 48 கோடி ரூபாய் சொத்துகளுடன் முதலிடத்தில் உள்ளார்....
139 கோடி ரூபாய் மதிப்பிலான நகைகள் மற்றும், 909 கோடி ரூபாயிலான அசையா சொத்துகள் இருப்பதாக பிரமாணப் பத்திரத்தில் லீமாரோஸ் மார்ட்டின் குறிப்பிட்டுள்ளார்..
நகைகள் - ரூ.139 கோடி
அசையா சொத்துகள் - ரூ.909 கோடி
மின் கம்பத்தில் மோதிய தனியார் பேருந்து - ஓட்டுநர் உயிரிழப்பு
தூத்துக்குடி அருகே, சாலையில் தாறுமாறாக ஓடிய தனியார் பேருந்து, மின் கம்பத்தில் மோதிய விபத்தில் ஓட்டுநர் உயிரிழந்தார்....
விபத்தில் காயமடைந்த பயணிகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்...
