Today Headlines | காலை 11 மணி தலைப்புச் செய்திகள் (03.05.2026) | 6 AM Headlines | ThanthiTV

Today Headlines | காலை 11 மணி தலைப்புச் செய்திகள் (03.05.2026) | 6 AM Headlines | ThanthiTV

தமிழ்நாட்டின் 234 சட்டமன்ற தொகுதிகளில் பதிவான வாக்குகள் நாளை ஒரே கட்டமாக எண்ணப்படுகிறது...

வாக்கு எண்ணிக்கை மையங்களில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ள நிலையில், தமிழகம் முழுவதும் ஒரு லட்சம் போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்..

நாளை வாக்கு எண்ணிக்கை நடைபெறவுள்ள நிலையில் நீலகிரியில் போலீஸ் மற்றும் துணை ராணுவத்தினர் அணிவகுப்பு ஒத்திகை நடத்தினர்.....

வாக்கு எண்ணிக்கையை அமைதியாக நடத்தவும், பொதுமக்களிடம் அச்சம் ஏற்படாமல் இருக்கவும் இந்த ஒத்திகை நடைபெற்றது..

கோவையில் 10 தொகுதிகளில் பதிவான வாக்குகள் நாளை எண்ணப்பட உள்ள நிலையில், போலீஸார் கலவர தடுப்பு ஒத்திகையில் ஈடுபட்டனர்......

வாக்கு எண்ணிக்கை மையத்திற்கு உள்ளேயோ, வெளியவோ அரசியல் கட்சியினருக்கு இடையே மோதல் நடைபெற்றால் அதனை கையாள்வது குறித்து போலீஸாருக்கு பயிற்சி வழங்கப்பட்டது..

மேற்கு வங்கத்தில் ஒரு தொகுதியில் தேர்தல் ரத்து செய்யப்பட்ட நிலையில், 293 தொகுதிகளில் பதிவான வாக்குகள் நாளை ஒரே கட்டமாக எண்ணப்படுகின்றன......

தேர்தல் தொடங்கியதில் இருந்தே பல இடங்களில் மோதல் நடைபெற்று வருவதால், வாக்கு எண்ணிக்கையை ஒட்டி, மாநிலம் முழுவதும் துணை ராணுவப் படையினர் குவிக்கப்பட்டுள்ளனர்...

டெல்லியில் அடுக்குமாடி குடியிருப்பில் ஏசி வெடித்து ஏற்பட்ட தீ விபத்தில் ஒன்பது பேர் உயிரிழந்தனர்......

மூன்று தளங்களில் தீ பரவிய நிலையில், தீயணைப்பு வீரர்கள் பல மணி நேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்...

X

Thanthi TV
www.thanthitv.com