Today Headlines | இரவு 10 மணி தலைப்புச் செய்திகள் (11.04.2026) | 10 PM Headlines | Thanthi TV
தமிழகத்தின் 234 தொகுதிகளிலும் அமைக்கப்படும் வாக்குப்பதிவு மையங்கள் குறித்த விவரங்களை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது...
நாளை முதல் வாக்காளர் தகவல் சீட்டு வழங்கும் பணிகள் தொடங்கப்பட உள்ளன..
தமிழக உள்துறை செயலாளர் தீரஜ் குமாரை தேர்தல் ஆணையம் அதிரடியாக மாற்றியுள்ளது....
புதிய உள்துறை செயலாளராக மணிவாசன் ஐஏஎஸ் பொறுப்பேற்றார்....
சமீபத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை டிஜிபியாக அறிவிக்கப்பட்ட சந்தீப் மிட்டலை விடுவித்து தேர்தல் ஆணையம் உத்தரவு..
ஆயுதப்படை போலீஸ் டிஜிபியாக மட்டும் சந்தீப் மிட்டல் தொடர்வார் என்றும், புதிய லஞ்ச ஒழிப்புத்துறை டிஜிபி பற்றிய அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது..
புதுச்சேரி சட்டமன்ற தேர்தலில் கள்ள ஓட்டு போட்டதாக விழுப்புரத்தை சேர்ந்த இளைஞர் ஒருவர் கைது...
ஆள்மாறாட்டம் செய்து மன்னாடிபட்டு தொகுதியில் கள்ள ஓட்டு போட்டதாக கூறப்படுகிறது..
மக்களுக்கான திட்டங்களை செயல்படுத்துவதில் திமுக தான் OG என்று முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்தார்...
சச்சினை போல முறியடிக்க முடியாத சாதனைகளை படைத்துள்ளது திமுக அரசு என்றும் புதுக்கோட்டை பிரசாரத்தில் அவர் பெருமிதம் தெரிவித்தார்..
